TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

கடற்படையில் செயிலர் பணி பிளஸ் 2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்காற்றும் முப்படைகளில் ஒன்றாக உள்ளது கடற்படை. நாட்டின் கடல் எல்லைகளைக் காப்பதுதான் கடற்படையின் முதன்மையான நோக்கமாக இருப்பினும், இந்தியா தனது கடற்படையைப் பல விதங்களில் பயன்படுத்துகிறது.

ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலமாக சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், துறைமுகங்களைப் பார்வையிடுதல், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல மனிதாபிமானச் செயல்பாடுகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இத்தனை சிறப்புகளோடு செயல்படும் கடற்படையில் செயிலர் (Sailor) பணியிடங்களுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கான நுழைவுத்தேர்விற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியக் கடற்படையில் சீனியர் செகண்டரி ரெக்ரூட் (Senior Secondary Recruit - S) செயிலர் பதவிக்கு, இந்தியா, நேபாளம், பூடான் நாடுகளைச் சேர்ந்த, திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம். 

கல்வித்தகுதி: 

விண்ணப்பிக்க விரும்புவோர் 2 அல்லது அதற்கு இணையான படிப்பில், கணிதம், இயற்பியல் பாடங்களுடன் வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் என்ற ஏதேனும் ஒரு பாடத்தை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்கு விண்ணப்பிக்க 1.8.1996 முதல் 31.7.2000 அன்றைக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

உடல்தகுதி: 

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, சரியான உடல் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 7 மணித்துளிகளில் 1.6 கிலோமீட்டர் ஓடக்கூடி யவர்களாகவும், 20 ஸ்க்வாட் அப்ஸ் (Squat ups) மற்றும் 10 புஷ்-அப்ஸ் (Push-ups) எடுக்கக்கூடியவர்களாகவும் இருக்கவேண்டும். விளையாட்டு, நீச்சல் உள்ளிட்ட பிற திறன் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குறைந்தபட்ச உயரம் 157 செ.மீ. இருக்க வேண்டும். இவர்கள் உடல் மற்றும் மன அடிப்படையில் பதவிக்கு ஏற்புடையவர்களாக இருக்க வேண்டும். இந்த உடல் தகுதிகளை ராணுவ மருத்துவர்கள் சோதனை செய்வார்கள். மேலும் கண்பார்வை, கண்ணாடிகள் அணியாத நிலை, நல்ல கண்பார்வை 6/6 என்று இருக்கவேண்டும். 

நுழைவுத்தேர்வு: 

தகுதியானவர்கள் ‘சரியான விடையைத் தேர்வு’ செய்யும் முறையிலான, ஒரு மணி நேர எழுத்துத் தேர்வை எழுத வேண்டும். 2 தரத்திலான இத்தேர்வில் ஆங்கிலம், அறிவியல், கணிதம், பொது அறிவு என்று நான்கு உட்பிரிவுகள் இருக்கும்.

ஆங்கிலப் பாடத்தில் பத்திகள் (Passage), பிரிப்போசிசன் (Preposition), வாக்கியம் திருத்துதல் (Sentence Correction), நேர்கூற்று அயற்கூற்று (Direct to Indirect), வினைச்சொல், காலம், வினைமுற்று (Verbs, Tenses, Non finites), நிறுத்தற் குறிகள் (Punctuations), பிரேசல் வெர்ப்ஸ் (Phrasal Verbs), ஒரே பொருள் சொற்கள், எதிர்ச்சொற்கள் (Synonyms, Antonyms), கடினமான சொற்களின் பொருள் (Meaning of difficult words), பண்புப் பெயர்கள் (Adjectives), காம்பவுண்ட் பிரிப்போசிசன் (Compound preposition), டிட்டர்மினர்ஸ் (Determiners), மாற்றுப் பெயர்கள் (Pronouns) என்ற தலைப்புகளில் வினாக்கள் இடம்பெறும். 

அறிவியல் பாடத்தில் இயற்பியல் உலகம், அலகுகள் (Physical world, Measurement), இயக்கவியல் (Kinematics), இயக்க விதிகள் (Laws of Motion), துகள்களின் இயக்கம், புவிஈர்ப்பு (Motion of system of particle, Gravitation), திட, திரவ இயக்கவியல் (Mechanics of Solids/liquids), வெப்ப இயக்கவியல் (Heat and Thermodynamics), அலைவுகள் (Oscillators), அலை இயக்கம் (Waves), மின்நிலையியல் (Electro Statics), மின்னியல் (Current Electricity), மின்காந்த தூண்டல், மாறும் மின்னூட்டம் (Electromagnetic, Induction, Alternating current), மின்காந்த அலைகள் (Electro Majestic waves), ஒளியியல் (Optics),பொருள்களில் இரு நிலை, கதிர்வீச்சுயியல் (Dual nature of Matter, Radiation), அணுக்கரு / திட, குறை கடத்திக் கருவிகள் (Atomic Nucleus, Solid, Semi conductor devices), செய்தித் தொடர்பியல் (Principles of Communication), உலோகங்கள், அலோகங்கள் (Metals, Non Metals), கரிம வேதியியல் (Organic Chemistry), உணவு, சத்துப்பொருள், உடல்நலம் (Food, Nutrition, Health), உடல் இயல், மானிட நோய்கள் (Physiology, Human Diseases), கணினி அறிவியல் (Computer Science) என்ற தலைப்புகளில் வினாக்கள் அமைந்திருக்கும்.

கணித பாடத்தில் தொடர்புகள், சார்புகள் (Relations, Functions), மடக்கைகள் (Logarithms), சிக்கல் எண்கள் (Complex Numbers),இருப்புச் சமன்பாடுகள் (Quadratic equations), வர்க்கங்கள், தொடர்கள் (Squares, Series), முக்கோணவியல் (Trigonometry), Cartesian Systems, Rectangular Coordinates, நேர்க்கோடுகள், நேர்க்கோட்டு குழுமங்கள் (Straight lines, Family of Straight lines), வட்டங்கள் (Circles), கூம்பு வடிவங்கள் (Conic Sections), பர்மியுட்டேசன் அண்ட் காம்பினேசன் (Permutation and Combination), வெக்டர்கள் (Vectors), ex, logx (Exponential, Logarithmic Series), கணம், கணம் கொள்கை (Sets and set theory), 3 dimensional geometry (முப்பரிமாண வடிவ கணிதம்), நிகழ்தகவு (Probability Functions), லிமிட்ஸ் அண்ட் கண்டினுயிட்டி (Limits and Continuity), வகைக்கெழு (Differentiation), வகைக்கெழு பிரதியீடுகள் (Application of derivatives), தொகைக்கெழு (Integrals), ஈருறுப்புக் கோவை (Binomials), மேட்ரிக்ஸ், டிட்டர்மினன்ட்ஸ் (Matrices, Determinants) என்ற தலைப்புகளில் வினாக்கள் கேட்கப்படும்.
 
பொது அறிவில், கலாசாரம், சமயம் (Culture, Religion), புவியியல், மண், ஆறுகள், மலைகள், துறைமுகங்கள், உள்நாட்டுத் துறைமுகங்கள், விடுதலை இயக்கம், விளையாட்டு, பாதுகாப்பு, போர்கள், அண்டை நாடுகள், தற்கால நிகழ்வுகள், இந்திய பாரம்பரியம், கலை இவற்றைப் பற்றிய உண்மைகள், நடனம், வரலாறு, மொழி, தலைநகரம் மற்றும் நாணயங்கள், தேசியப் பறவை, வனவிலங்கு, பூக்கள், தேசிய கீதம், தேசியக் கொடி, தேசிய நினைவுச் சின்னங்கள், புகழ்பெற்றவர்கள், பொதுப் பெயர்கள், கண்டுபிடிப்புகள், நோய்கள், புரத உணவு, பரிசுகள், எழுத்தாளர்கள் என்ற தலைப்புகளில் வினாக்கள் இருக்கும்.

தேர்வு செய்யும் முறை: 

எழுத்துத் தேர்வு, உடற் தகுதி, மருத்துவத் தேர்வு என்ற 3 நிலைகளில் நடைபெறும்.

பணி பற்றி: 

பயிற்சிக் காலத்தில் ரூ. 5,700/- மாதம் ஊக்கத்தொகை தரப்படும். பயிற்சிகளுக்குப் பின் ரூ. 5,200-20,200 என்ற ஊதியமும், ரூ. 2,000 கிரேடு ஊதியமும், ரூ. 2,000 மற்றும் டி.ஏ. தரப்படும். இப்பணிக்குப் பின் சுபேதார், மேஜர் என்ற பதவி உயர்வு பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.joinindiannavy.gov.in/ என்ற வலைத்தளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ‘‘Apply online Sailor Entry’’ என்ற போர்ட்டலில் விண்ணப்பப் படிவம் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் 2 மதிப்பெண் சான்று, சொந்த ஊர் சான்று, என்.சி.சி. சான்று, 22/10 செ.மீ அளவுடைய சுய முகவரியிட்ட, ரூ. 10 ஸ்டாம்பு ஒட்டப்பட்ட உறை இவற்றை இணைக்க வேண்டும். உறையின் மேல், ‘Online SSR Application - 02/2017 Batch & XII Percentage’ என்று எழுதவேண்டும். 

ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 19.12.2016. 

அலுவலகத்திற்கு பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்று சேர இறுதி நாள் 26.12.2016.

மேலும் விவரங்களை அறிய மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment