TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

கப்பல் கட்டும் தளத்தில் டெக்னிக்கல் பிரிவில் வேலை! 468 பேருக்கு வாய்ப்பு

இந்தியாவில் மும்பையிலுள்ள மசகான் டாக் லிமிடெட் கப்பல் கட்டுதல், கரையோர கப்பல் படைப்பாக்கப் பணிகளில் ஈடுபட்டு வரும் பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். இந்தியக் கப்பல் படை, கடலோரக் காவல் படை, ஓ.என்.ஜி.சி. போன்றவற்றிற்கான கப்பல்களை இந்த நிறுவனமே வடிவமைப்பது மற்றொரு சிறப்பாகும்.

இந்த நிறுவனத்தில் டெக்னிக்கல் பிரிவில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: 

பேக்லாக் பணியிடங்களான Skilled Grade-I (IDA-5) பணிக்கு 41 பேரும், அன்ஃபில்டு பணியிடங்களான Skilled Grade-I (IDA-5)க்கு 7 பேரும், Semi-Skilled Gr-III (IDA-4A), Semi Skilled Grade-I (IDA-2) ஆகிய பணியிடங்களுக்கு 420 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித்தகுதி: 

விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. டெக்னிக்கல் பதவிகளுக்கு விண்ணப்பிக்க உரிய பிரிவுகளில் டிப்ளமோ படிப்பு தேவைப்படும். 

விண்ணப்பிக்கும் பிரிவுக்கான தகுதியை http://mazdock.com/writereaddata/career/Web_Ad_84_3011_1130201630044PM.pdf இணையதளத்திலிருந்து அறியவும்.

வயதுவரம்பு: 

விண்ணப்பதாரர்கள் 1.4.2016 அன்று 18 வயது நிரம்பியவர்களாகவும் 33 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். 

மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை ஆங்கிலம், இந்தி அல்லது மராத்தி மொழியில் ஒரு ஏ4 அளவு தாளில் நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் உரிய இணைப்புகளையும் மறவாமல் இணைக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணம்:

பொது, மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100/-க்கான டி.டி.,யை Mazagon Dock Ltd. என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். 

முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 20.12.2016 க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். 

மேலும் விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்திலிருந்து அறியவும்.

முகவரி:

Recruitment Cell,
Service Block & 3rd Floor,
Mazagon Dock Limited,
Dockyard Road,
Mumbai - 400010.

No comments:

Post a Comment