பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள பயோ-கெமிஸ்ட்ரி, ஸ்கூல் ஆப் லைப் சயின்ஸ் துறையில் காலியாகஉள்ள தற்காலிக விரிவுரையாளர் பணிக்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எம்.எஸ்சி, எம்,பில்., பி.எச்டி.,(உயிரி வேதியியல், உயிரியல், அனிமல் சயின்ஸ், பயோ-இன்பர்மேடிக்ஸ், லைப் சயின்ஸ்), போன்ற படிப்புகளை கற்பிப்பதற்காக தற்காலிக விரிவுரையாளர்களை தேர்வு செய்யப்பட உள்ளது.ஆகஸ்ட் 31ம் தேதி காலை 10 மணிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் சுயவிவரம் அடங்கிய பயோ-டேட்டா மற்றும் பணிஅனுபவம் உள்ள சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வந்து பங்கேற்கலாம்.மேலும் விவரங்கள் அறிய http://www.bdu.ac.in/என்ற இணையதளத்தை அணுகலாம்.
பாரதிதாசன் பல்கலை: தற்காலிக விரிவுரையாளர் பணி வாய்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment