தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் நிலையங்களில் Postal Assistants, Sorting Assistants, Postal Assistant (Returned Letter Office), Postal Assistant (Foreign Postal Organisation), Postal Assistant (SBCO) உள்ளிட்ட பணிகளுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அறிவிப்பு எண்: REP/2-2/2011&2012/DRஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி:11.08.2012கல்வித்தகுதி: பொதுப்பிரிவினர் பன்னிரெண்டாம் வகுப்பில் 60 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். OBC பிரிவினர் 55சதவிகித மதிப்பெண்களும், SC/ST பிரிவினர் 45 சதவிகித மதிப்பெண்களும் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு பரை தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.வயதுவரம்பு: 01.10.2012 தேதிப்படி 18 -லிருந்து 27-க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுதிறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு மத்திய அரசின் சட்டவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.சம்பளம்: ரூ.5,200 - 20,200 + Grade Pay ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் கம்ப்யூட்டர், தட்டச்சு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்விண்ணப்பப் படிவம் பெறும் முறை: பரிந்துரைக்கப்பட்ட OMRவிண்ணப்ப படிவங்களை ரூ.50 செலுத்தி அனைத்து தலைமை அஞ்சல்நிலையங்கள் மற்றும் குறிப்பிட்ட அஞ்சல் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பப் படிவங்கள் 25.09.2012 வரை மட்டுமே விற்கப்படும்.தேர்வு கட்டணம்: ரூ. 200. SC/ST பிரிவினர், மாற்றுதிறனாளிகள் மற்றும் அனைத்து பெண் விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை விரைவு அஞ்சல் மற்றும் பதிவு அஞ்சலில்மட்டுமே அனுப்ப வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Direct Recruitment Cell, New Delhi HO, New Delhi -110001.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.10.2012மேலும் காலியிடங்கள் விவரம், தேர்வு விவரங்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அரிந்துகொள்ள www.tamilnadupost.nic.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment