விமான போக்குவரத்துத் துறையில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குமரி மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் ந.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விமான போக்குவரத்துத் துறை சென்னை மண்டலத்தில் 147 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் படை வீரர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப் பதவிக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட ஆட்டோமொபைல் மெக்கானிக்கல் பயிற்சி முடித்தவர்கள் அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியுடையவர்கள். விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த முன்னாள் படை வீரர்கள் WWW.AIRPORTSINDIA.ORG.IN என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு உரிய விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து மார்ச் 31 க்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment