TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

அரசு மறுவாழ்வு இல்லங்களுக்கு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு மறுவாழ்வு இல்லங்களுக்கு ஆண் காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி அறிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டத்துக்கு உள்பட்ட பரனூரில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு மறுவாழ்வு இல்லத்துக்கு 4 ஆண் காவலர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
 இப்பணியிடங்களுக்கு, தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்: 10-ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் மட்டும். பொதுப்பிரிவினர் 18 வயது முதல் 30 வயது வரை. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 18 வயது முதல் 32 வயது வரை. ஆதிதிராவிடர் 18 வயது முதல் 35 வயது வரை.
 மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஒரு பணியிடம், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம் தவிர) ஒரு பணியிடம், பொது பிரிவினர் ஒரு பணியிடம் மற்றும் ஆதிதிராவிடர் ஒரு பணியிடம்.
 உடற்தகுதி: உயரம் 186 செ.மீ. மார்பளவு சாதாரண நிலையில் 86 செ.மீ., விரிந்த நிலையில் 91 செ.மீ., ஆதிதிராவிடர்களுக்கு சாதாரன நிலையில் 79, விரிந்த நிலையில்
ஊதிய விகிதம் 5,200 முதல் 20,200 வரை.
 மேற்கண்ட தகுதிகளையுடைய விண்ணப்பதாரர்கள் பெயர், தந்தை பெயர், பாலினம், பிறந்த தேதி, அஞ்சல் முகவரி, கல்வித் தகுதி, ஜாதி முன்னுரிமை விவரம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வைத்திருந்தால் அதற்கான சான்று நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் செப்டம்பர் 16-ஆம் தேதிக்குள் அரசு மறுவாழ்வு இல்லம், பரனூர், செங்கல்பட்டு-603002 என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment