அரசு வேலைக்காகப் பதிவு செய்தோர் எண்ணிக்கை 81.33 லட்சமாக உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி, எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் 81 லட்சத்து 33 ஆயிரத்து 734 பேர் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்துள்ளனர். பெண்கள் 41 லட்சத்து 98 ஆயிரத்து 252 பேர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தோர் (ஆண்-பெண் இருபாலரும்) 17 லட்சத்து 90 ஆயிரத்து 269 பேர். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தோர் 33 லட்சத்து 30 ஆயிரத்து 337 பேர்.

மொத்தமுள்ள 81 லட்சம் பேரில், பொறியியல் பட்டப்படிப்பு படித்தோர் மட்டும் 2 லட்சத்து 46 ஆயிரத்து 56 பேர். கலை படிப்புகளைப் படித்த 4 லட்சத்து 43 ஆயிரத்து 940 பேரும், அறிவியல் படிப்புகளைப் படித்த 5 லட்சத்து 97 ஆயிரத்து 209 பேரும் ஆவர்.
No comments:
Post a Comment