TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்கள் தேர்வு

அஞ்சல் துறை சேவைகளான அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்கான நேரடி முகவர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது.

 
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்தப் பணிக்கான வயது வரம்பு 18-லிருந்து 60 வரை.  
 
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவங்களை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் மார்ச் 15.

இந்தப் பணிக்கான நேர்காணலை அஞ்சல் துறை, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடத்தும். நேர்கானலுக்கு தேர்ச்சிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்காணலின்போது சுயவிபரக் குறிப்புடன் வயது  மற்றும் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும்.

No comments:

Post a Comment