TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

சவுதி அரேபியாவில் மருத்துவர் பணி: 21 முதல் நேர்முகத் தேர்வு.

சவுதி அரேபியாவில் அரசு மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள மருத்தவர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 21-ம் தேதி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.  
இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுப்பையைன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சவுதி அரேபிய அமைச்சகத்தின் அபரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு அவசர மருத்துவ, தீவிர சிகிச்சைப் பிரிவு, மயக்க மருத்துவம், ஆர்தோபீடிக், மகப்பேறு மருத்துவர்கள், இந்டர்னல் மெடிசன், குழந்தைநலம், நேரடியாலஜி, பொது அறுவைச் சிகிச்சை, பேமிலி மெடிசன் போன்ற பிரிவுகளில் அனுபவமிக்க அலோபதி மருத்துவர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை தில்லியிலும், வரும் 25 மற்றும் 26-ஆம்  தேதிகளில் ஹைதராபாத்திலும் நடைபெறுகிறது.
இதில், 2 ஆண்டு பணி அனுபவம் மற்றும் 55 வயதிற்குட்ட கண்சல்டண்டுகள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் விண்ணப்பிககத் தகுதியுடைவர் ஆவர். தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பு மருத்துவர்களுக்கு அனுபவத்திற்கேற்ப நல்ல ஊதியமும், விலையில்லா உணவு, இருப்பிடம், விமான டிக்கெட், குடும்ப விசா மற்றும் சவுதி அரேபிய அரசின் சட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும்.
விருப்பும் தகுதியும் உள்ள மருத்துவர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை ovemcldr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment