TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

அணு ஆற்றல் துறையில் அறிவியல் அதிகாரிகளாக வாய்ப்பு.

மத்திய அரசின் அணு ஆற்றல்துறை (Department of Atomic Energy- DAE) அணு ஆற்றல் மற்றும் ஆய்வு உலைகள் வடிவமைப்பு, இயக்கம், அணு எரிபொருள் சுழற்சி தொழில்நுட்பம், அணுக்கரு தாதுக்கள் கண்டறிதல், வெட்டியெடுத்தல், கடினநீர் உருவாக்குதல், அணுக்கரு எரிபொருள் உருவாக்குதல், அணுக்கரு கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது.

இத்துறை ‘பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டர்’-ன் பயிற்சிப் பள்ளி (Bhabha Atomic Research Centre Training School) மூலம் அறிவியல் அதிகாரிகளை (Scientific Officers) பணியமர்த்துகிறது.

கல்வித்தகுதி: 

எஞ்சினியரிங் பிரிவிற்கு கெமிக்கல், மெட்டலர்ஜிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், நியூக்ளியர் எஞ்சினியரிங் என்ற பாடங்களில் B.E., B.Tech., B.Sc., (Engg), M.Tech (5 Years) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரேடியாலஜிக்கல் சேஃப்டி எஞ்சினியரிங் பிரிவிற்கு நியூக்ளியர் எஞ்சினியரிங், நியூக்ளியர் டெக்னாலஜி, நியூக்ளியர் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி என்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE., B.Tech. முடித்திருக்க வேண்டும். குறைந்தது 60% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

B.E., B.Tech., B.Sc., (Engg), M.Tech (5 years) படித்தவர்களும் M.Sc., (Physics, Applied Physics, Chemistry, Bio-Science, Gio-Physics, Applied Gio-Physics)படித்தவர்களும், M.Tech., படிப்பிற்குச் சமமான M.Sc., (Giology, Applied Giology, Gio Chemistry, Gio-Technology (5Years), Gio Physical Technology) பொறியியல் பிரிவிற்கும், B.E., B.Tech., Engineering Physics; B.E., B.Tech., B.Sc., (Tech) Food Technology படித்தவர்கள் அறிவியல் பிரிவிற்கும் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 

விண்ணப்பிக்க 1.8.2016 நிலவரப்படி, பொதுப் பிரிவினர் 26 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டவர் 29 வயதுக்குள்ளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 31 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இந்தியக் குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இறுதித்தேர்வு எழுதி உள்ளவர்களும், GATE-2016 தேர்வு எழுதியிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது சலுகை உண்டு.

பணிகளும்… பயிற்சிகளும்!

A) OCES - 2017  (Scheme-I) (One Year Training Program for Engineering Graduats) or Science Post Graduates) 

இந்த ஓராண்டுப் பயிற்சி, மும்பை பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டர், கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆய்வு மையம், இந்தூர் இராஜா இராமண்ணா அட்வான்ஸ்டு டெக்னாலஜி, ஐதராபாத் நியூக்ளியர் காம்ப்ளெக்ஸ், அட்டாமிக் மினரல் டைரக்டோரேட் ஃபார் எக்ஸ்புளோரேசன் அண்டு ரிசர்ச் - ஐதராபாத் போன்ற இடங்களில் உள்ள பயிற்சிப் பள்ளிகளில் இப்பயிற்சி நடைபெறும். 

இப்பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.35000 மற்றும் நூல் வாங்க ஒருமுறை ரூ.10,000ம் தரப்படும்.

B) DGFS (Scheme-II)

இம்முறையில், மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், கராக்பூர், சென்னை, ரூர்க்கி ஆகிய இடங்களில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜிக்கல், பனாரஸ் ஹிந்து யுனிவர்சிட்டி வாரணாசி, ரூர்க்கேலா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மும்பை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி இவற்றில் எம்.டெக் (M.Tech) அல்லது மாஸ்டர் ஆஃப் கெமிக்கல் எஞ்சி னியரிங் பயிற்சிகள் வழங்கப்படும். இளநிலைப் பட்டதாரிகள் அல்லது இயற்பியல் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு இரண்டு வருட ஃபெல்லோஷிப் வழங்கப்படும். 

இவர்களுக்குச் செலுத்திய டியூஷன் கட்டணம் திரும்பத் தரப்படுவதுடன், மாதந்தோறும் ரூ.35000 ஊக்கத்தொகையும், நூல்கள் வாங்க ஒருமுறை ரூ.10,000 மற்றும் (கன்டிஜென்சி தொகை) இதர செலவுகளுக்காக ரூ.25000 வழங்கப்படும். படிப்பிற்குப்பின், சயின்டிஃபிக் ஆபிசர் பதவி வழங்கப்படும்.

தேர்வு முறை: 

இந்த இரண்டு திட்டங்களுக்கும் இரண்டு நிலைகளில் தேர்வு நடைபெறும். முதலில் கேட்-2016 அல்லது கேட்-2017 தேர்வில் தேவையான மதிப்பெண் பெற்றவர்கள் ஆன்லைன் ஸ்கிரீனிங் தேர்வு எழுத வேண்டும். பின் இரண்டாவது நிலையில் நேர்முகத் தேர்வைச் சந்திக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மண்ணியல் மற்றும் புவி இயற்பியல் முடித்தவர்கள் மட்டும் மருத்துவத் தகுதித் தேர்வைச் சந்திக்க வேண்டும். கேட் தேர்வு எழுதாதவர்கள், அணுசக்தித் துறை வருகிற மார்ச் மாதத்தில் நடத்த உள்ள ஆன்லைன் தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வில் அப்ஜெக்ட்டிவ் டைப்பில் 100 கேள்விகள் கேட்கப்படும்.

வாய்ப்புகள்: 

தேர்ச்சியும், பதவியும் பெற்றவர்களுக்குப் பொறியியல், அறிவியல் உயர்நிலைகள், அடுத்த தலைமுறை அணுக்கரு உலை வடிவமைப்பு, உயர் தொழில்நுட்பம், அணுக்கரு எரிபொருள் தயாரிப்பு, துகள் முடுக்கிகள் தொழில்நுட்பம், லேசர் தொழில்நுட்பம் இவற்றில் முன்னுரிமை தரப்படும்.

தேர்விற்குப்பின் அனைத்துச் சலுகைகளுடன் மாதம் ரூ.56,100, ரூ.63,000 ஆகிய அடிப்படை ஊதியத்துடன் குரூப்-A அறிவியல் அதிகாரி பதவி பெறுவார்கள். மேலும் இவர்கள் ஹோமி பாபா அணு ஆய்வு மையத்தில், எம்.டெக்., எம்.பில் படிக்க வாய்ப்புத் தரப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதி யும் உள்ளவர்கள் www.barconlineexam.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆண் பொதுப் பிரிவினரும், பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. போரில் இறந்த ராணுவத்தினரின் பிள்ளைகள், பெண்கள் ஆகியவர்களுக்கு இந்தக் கட்டணம் இல்லை.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.2.2017

மேலும் விவரங்கள் அறிய மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment