TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலை! 1319 பேருக்கு வாய்ப்பு!

மத்திய சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று கோல் இண்டியா லிமிடெட். பல்வேறு இடங்களில் நிலக்கரி சுரங்கங்களை கையாளும் இந்த நிறுவனத்தில் தற்போது மேனேஜ்மென்ட் டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

மொத்தம் 1319 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் அதிகபட்சமாக மைனிங் 191, எலக்ட்ரிக்கல் 198, மெக்கானிக்கல் 196, சிவில் 100, நிதி-கணக்கு 257, ஹெச்.ஆர். 134 பணியிடங்கள் உள்ளன. இவை தவிர பப்ளிக் ரிலேசன்ஸ் ராஜ்பாஷா, சேல்ஸ் மார்க்கெட்டிங், மெட்டீரியல் மேனேஜ்மென்ட், ஐ.டி. இண்டஸ்ட்ரியல் எஞ்சினியரிங், மெட்டீரியல் மேனேஜ்மென்ட் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளிலும் கணிசமான பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களைப் பார்ப்போம்.

கல்வித்தகுதி: 

பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. (எஞ்சினியரிங்) எம்.சி.ஏ., எம்.எஸ்சி., எம்.டெக்., போன்ற படிப்புகளைப் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் விவரமாகப் பார்க்கலாம்.

வயதுவரம்பு: 

விண்ணப்பதாரர்கள் 1.12.2016ம் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை: 

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: 

பொது மற்றும் ஓ.பி.சி., பிரிவினர் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.2.2017. 

ஆன்லைன் தேர்வு 26.3.2017 அன்று நடத்தப்படுகிறது. 

முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சொந்த உபயோகத்துக்காக கணினிப்பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும். 

விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களைத் தெரிந்துகொள்ளவும் www.coalindia.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment