TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

கப்பல் கட்டும் தளத்தில் டெக்னிக்கல் பிரிவில் வேலை! 1040 பேருக்கு வாய்ப்பு!

மும்பையில் செயல்பட்டுவரும் மசகான் டாக் லிமிடெட் கப்பல் கட்டுதல், கரையோர கப்பல் படைப்பாக்கப் பணிகளில் ஈடுபட்டு வரும் பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் டெக்னிக்கல் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1040 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.


பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் Skilled Grade-I (IDA-5) பணிக்கு 944 பேரும், Semi Skilled Grade-III (IDA-4A)க்கு 15 பேரும், Semi-Skilled Grade-I (IDA-2)பணிக்கு 81 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித்தகுதி: 

விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. டெக்னிக்கல் பதவிகளுக்கு விண்ணப்பிக்க உரிய பிரிவுகளில் டிப்ளமோ படிப்பு தேவைப்படும். 

விண்ணப்பிக்கும் பிரிவுக்கான தகுதியை http://www.mazdock.com/ என்ற இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

வயதுவரம்பு: 

விண்ணப்பதாரர்கள் 1.1.2017 அன்று 18 வயது நிரம்பியவர்களாகவும் 33 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை ஆங்கிலம், இந்தி அல்லது மராத்தி மொழியில் ஒரு ஏ4 அளவு தாளில் நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் உரிய இணைப்புகளையும் மறவாமல் இணைக்க வேண்டும். சுய கையொப்பமிட்டு சான்றுகளை இணைத்து அனுப்பவேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: 

பொது, மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100ஐ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலான் மூலம் அருகிலுள்ள எஸ்.பி.ஐ. வங்கியில் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய செலானின் ஒரு பகுதியை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் இந்தக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 

முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பின்வரும் முகவரிக்கு 9.2.2017 க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். 

மேலும் விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்திலிருந்து அறியவும்.

முகவரி:

DGM (HR-Rec-NE), 
Recruitment Cell, 
Service Block - 3rd Floor, 
Mazagon Dock Shipbuilders Limited, 
Dockyard Road,   
Mumbai - 400010.    

No comments:

Post a Comment