TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடம்: பதிவு விவரங்களை சரிபார்க்க அழைப்பு.

கிராம சுகாதார செவிலியர் பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள், பதிவு விவரங்களை வரும் 9-ஆம் தேதிக்குள் சரிபார்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி:

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 2,804 கிராம சுகாதார செவிலியர் (பெண்கள் மட்டும்) பணிக் காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக் காலியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டியல் வேலைவாய்ப்புத் துறையால் தயாரிக்கப்பட உள்ளது.
 இதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 1.7.2016 அன்று 18. அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இதற்கு 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடன், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் 18 மாத ஆன்சிலரி நர்ஸ் மிட்வொய்ப் அல்லது மல்டி பர்பஸ் ஹெல்த் ஒர்க்கர் (பெண்கள்) சான்றிதழ் அல்லது பிளஸ் 2 கல்வித் தகுதியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இரண்டாண்டு ஆன்சிலரி நர்ஸ் மிட்வொய்ப் அல்லது மல்டி பர்பஸ் ஹெல்த் ஒர்க்கர் (பெண்கள்) சான்றிதழுக்கான கல்வித் தகுதியை முடித்து, தமிழ்நாடு நர்சஸ் மற்றும் மிட்வொய்ப்ஸ் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
 இந்த கல்வித் தகுதியுடைய, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் அனைவரும் வரும் 9-ஆம் தேதிக்குள் பதிவை சரிபார்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment