TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை வாய்ப்பு

ராஜஸ்தானில் உள்ள இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள 23 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.


பணியிடங்கள் விவரம்:

1. Assistant Grade I (Human Resource): 

3 இடங்கள் (VH - 2, HH - 1). 

2. Assistant Grade 1 (Finance & Accounts): 

7 இடங்கள் (VH - 3, HH - 2, OH - 2).

3. Assistant Grade 1 (Contracts & Materials Management): 

3 இடங்கள் (HH - 2, OH - 1).

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான சம்பளம்: 

ரூ.25,500. 

வயது வரம்பு: 

10.12.16 அன்று 21 முதல் 28க்குள். 

தகுதி: 

Science/ Commerce/ Arts பாடங்களில் 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் பெற்று MS Windows Operating System and Desktop Applicationsல் 6 மாத சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

4. Pathology Lab Technician: 

1 இடம் (HH). 

வயது வரம்பு: 

10.12.16 அன்று 18 முதல் 30க்குள். 

தகுதி: 

50% மதிப்பெண்களுடன் பிஎஸ்சி பட்டம் பெற்று Medical Lab Technologyயில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது 60% மதிப்பெண்களுடன் Medical 
Lab Technology யில் பிஎஸ்சி பட்டம்.

5. Stipendiary Trainee (Mechanical):

2 இடங்கள் (HH).

6. Stipendiary Trainee (Electronics): 

1 இடம் (VH)

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது வரம்பு: 

10.12.16 அன்று 18 முதல் 25க்குள்.

தகுதி: 

பிளஸ் 2 தேர்ச்சியுடன் மெக்கானிக்கல் பாடங்களில் 60% தேர்ச்சியுடன் டிப்ளமோ தேர்ச்சி.

சம்பளம்: 

ரூ.35,400.

7. Stipendiary Trainee: 

2 இடங்கள் (HH): 

சம்பளம்: 

ரூ.21,700. 

வயது வரம்பு: 

18 முதல் 24க்குள். 

தகுதி: 

அறிவியல் பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி.

8. Stipendiary Trainee Maintainer (Welder): 

1 இடம் (HH). 

சம்பளம்: 

ரூ.21,700. 

வயது வரம்பு: 

10.12.16 அன்று 18 முதல் 24க்குள்.

9. Stipendiary Trainee Maintainer (Turner): 

1 இடம் (VH). 

சம்பளம்: 

ரூ.21,700. 

வயது வரம்பு: 

10.12.16 அன்று 18 முதல் 24க்குள்.

10. Stipendiary Trainee Maintainer (Fitter): 

2 இடங்கள் (VH). 

சம்பளம்: 

ரூ.21,700. 

வயது வரம்பு: 

18 முதல் 24க்குள். 

8 முதல் 10 வரையுள்ள பணிகளுக்கான கல்வித்தகுதி: 

50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Turner/ Fitter/ Welder டிரேடில் 2 வருட ஐடிஐ முடித்து ஒரு வருட பணி அனுபவம்.

வயதுவரம்பு சலுகை: 

பொது (மாற்றுத்திறனாளி) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டி (மாற்றுத்திறனாளி)யினருக்கு 15 ஆண்டுகளும், ஒபிசி (மாற்றுத்திறனாளி)யினருக்கு 13 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத்தேர்வு, டைப்பிங் தேர்வு, திறனறி தேர்வு, டிரேடு தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Stipendiary Trainee 5 மற்றும் 6 பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒன்றரை வருடம் பயிற்சி வழங்கப்படும். ரூ.9,300 உதவித் தொகை வழங்கப்படும்.

7 முதல் 10 வரையிலுள்ள Stipendiary Trainee பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 2 வருடங்கள் பயிற்சி வழங்கப்படும். 

சம்பளம்:

பயிற்சியின் போது முதல் வருடம் மாதம் ரூ.6,200 மற்றும் இரண்டாம் வருடம் மாதம் ரூ.7,200 

7 முதல் 10 வரையுள்ள பணிகளுக்கான உடற்தகுதி: 

உயரம்- 160 செ.மீ., எடை: 45.5 கிலோ.

தகுதியானவர்கள் www.npcilcareers.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.12.2016.

No comments:

Post a Comment