TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மத்திய அரசு பணிகளுக்கு யுபிஎஸ்சி தேர்வு அறிவிப்பு.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணியிடங்கள் விவரம்:

1. மத்திய மீன்வள கடற் பொறியியல் நிறுவனத்தில் துணை இயக்குநர்: (பொருளியல் நிபுணர்) - 1 இடம் (பொது). வயது: 40க்குள். சம்பளம்: ரூ.15,600 - 39,100. தகுதி: பொருளியல் பாடத்தில் புள்ளியியலை ஒரு பாடமாகக் கொண்டு அல்லது வணிகவியல் பாடப்பிரிவில் புள்ளியியலை ஒரு பாடமாகக் கொண்டு முதுநிலை பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம். 

2. பொருளியல் மற்றும் புள்ளியியல் இயக்குனரகத்தில் பொருளியல் அதிகாரிகள்: 2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1). சம்பளம்: ரூ.9,300 - 34,800. வயது: 30க்குள். தகுதி: Economics/ Applied Economics/ Business Economics/ Econometrics பாடத்தில் முதுநிலை பட்டம்.

3. புதுடெல்லி ராணுவ தலைமையகத்தில் சிவிலியன் உதவி பாதுகாப்பு அதிகாரி: 8 இடங்கள் (பொது - 5, எஸ்சி - 2, எஸ்டி - 1). சம்பளம்: ரூ.9,300 - 34,800. வயது: 30க்குள். தகுதி: இளநிலை பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம்.

4. பொது தொழிற்சாலை ஆலோசனை சேவை இயக்குனரகத்தில் உதவி இயக்குநர்: 1 இடம். சம்பளம்: ரூ.56,100 - 1,77,500. வயது: 40க்குள். தகுதி: Chemistry/ Bio-chemistry பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம். 

5. விடுதி உணவுப் பொருள் துறையில் மேலாளர்கள் கிரேடு - 1/ பிரிவு அலுவலர்கள்: 13 இடங்கள் (பொது - 11, எஸ்சி - 1, எஸ்டி - 1). சம்பளம்: ரூ.15,600 - 39,100. வயது: 40க்குள். தகுதி: Chemistry/ Bio Chemistry பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம். நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தகுதியானவர்கள் http://www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். பிரின்ட் அவுட்டை கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2016.
பிரின்ட் அவுட் எடுக்க வேண்டிய கடைசி நாள்: 16.12.2016.

No comments:

Post a Comment