TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

ஐடிஐ படித்தவர்களுக்கு தாராப்பூர் அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு

மகாராஷ்டிரா மாநிலம், தாராப்பூர் அணு ஆராய்ச்சி மற்றும் அணு மறுசுழற்சி மையத்தில் காலியாக உள்ள 168 பணியிடங்களுக்கு ஐடிஐ, பட்டப்படிப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


A. Category-II (Stipendiary Trainees): மொத்த இடங்கள்: 157 (எஸ்டி - 13, ஒபிசி - 60, பொது - 81, மாற்றுத்திறனாளி - 3).

பணியிடங்கள் விவரம்:

1. Plant Operator: 20 இடங்கள் (பொது - 9, ஒபிசி - 8, எஸ்டி - 3). தகுதி: கணிதம், வேதியியல், கணிதம் உள்ளிட்ட அறிவியல் பாடங்களுடன் 60% தேர்ச்சியுடன் பிளஸ்2 தேர்ச்சி.
2. Attendant Operator (Chemical Plant): 7 இடங்கள் (பொது - 4, ஒபிசி - 3).
3. Laboratory Assistant (Chemical Plant): 5 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 3).
4. Fitter: 2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1).
5. Machinist: 1 இடம் (பொது).
6. Maintenance Mechanic: (Chemical Plant): 19 இடங்கள் (பொது - 11, ஒபிசி - 8).
7. Welder (GMAW & GTAW): 8 இடங்கள் (பொது - 4, ஒபிசி - 3, எஸ்டி - 1).
8. Turner: 2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1).
9. A/C Mechanic: 4 இடங்கள் (ஒபிசி - 3, பொது - 1).
10. Instrument Mechanic (Chemical Plant): 6 இடங்கள் (பொது - 3, ஒபிசி - 2, எஸ்டி - 1).
11. Electrician: 39 இடங்கள் (எஸ்டி - 5, ஒபிசி - 15, பொது - 19).
12. Electronic Mechanic: 9 இடங்கள் (ஒபிசி - 4, பொது - 5).
13. Mechanic Automobile (Advanced Diesel Engine): 2 இடங்கள் (பொது).
14. Mechanic Repairs & Maintenance of Heavy Vehicle: 2 இடங்கள் (பொது).
15. Mechanic (Motor Vehicle): 4 இடங்கள் (எஸ்டி - 1, ஒபிசி - 1, பொது - 2).
16. Mason: 14 இடங்கள் (எஸ்டி - 1, ஒபிசி - 4, பொது - 9).
17. Painter: 5 இடங்கள் (எஸ்டி - 1, ஒபிசி - 2, பொது - 1, மாற்றுத்திறனாளி - 1).
18. Plumber: 3 இடங்கள் (ஒபிசி - 1,பொது - 1, மாற்றுத்திறனாளி - 1).
19. Carpenter: 3 இடங்கள் (ஒபிசி - 1, பொது - 3, மாற்றுத்திறனாளி - 1).

தகுதி: 2 முதல் 19 வரையுள்ள தொழிற்பிரிவுகளுக்கான கல்வித்தகுதி: 60% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Attendant Operator (Chemical Plant)/ Laboratory Assistant (Chemical Plant)/ Fitter/ Machinist/ Maintenance Mechanic (Chemical Plant)/ Welder (GMAW   >AW)/ Turner/ A/c Mechanic/ Instrument Mechanic (Chemical plant)/ Electrician/ Electronic Mechanic/ Mechanic Automobile (Advanced Diesel Engine)/ Mechanic (Repairs & Maintenance of Heavy Vehicle/ Mechanic (Motor Vehicle)/ Mason/ Painter/ Plumber/ Carpenter - இந்த டிரேடுகளில் ஏதேனும் ஒன்றில் ஐடிஐ தேர்ச்சியுடன் NTC/NAC சான்று பெற்றிருக்க வேண்டும்.

வயது: 13.12.2016 அன்று 18 முதல் 22க்குள். உதவித்தொகை: முதல் ஆண்டு ரூ.6,200. இரண்டாம் ஆண்டு ரூ.7,200. உடற்தகுதி: உயரம்: 160 செ.மீ., எடை: 45.5 கி.கி.

B. Direct Recruitment : 

மொத்த இடங்கள் 11. (எஸ்சி - 2, எஸ்டி - 1, ஒபிசி - 2, பொது - 3, மாற்றுத்திறனாளி - 3).

1. Technician/C (Boiler Operator): 1 இடம் (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் முதல் வகுப்பில் Boiler Attendant சான்று பெற்றிருக்க வேண்டும். வயது: 13.12.2016 அன்று 18 முதல் 25க்குள். சம்பளம்: ரூ.25,500.

2. Upper Division Clerk: 10 இடங்கள். (பொது - 2, ஒபிசி - 2, எஸ்சி - 2, எஸ்டி - 1, மாற்றுத்திறனாளி - 4). தகுதி: Arts/ Science/ Commerce பாடங்களில் 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டத்துடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.25,500.

அதிக பட்ச வயதுவரம்பில் ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் தளர்வு அளிக்கப்படும். எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி., எஸ்டி. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரர்கள் www.barcrecruit.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.12.2016

No comments:

Post a Comment