மத்திய அரசின் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றான பவர் பைனான்ஸ் நிறுவனம் மின் உற்பத்தி திட்டங்களுக்கு நிதியுதவியை செய்யும் நிறுவனமாகும். இந்நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.5.27 லட்சம் கோடியில் 2016ம் ஆண்டு மார்ச் 31 வரை ரூ.3.92 லட்சம் கோடியை விநியோகித்து பல்வேறு மின் திட்டங்களை உருவாக வழிவகுத்துள்ளது.
பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளர் உள்ளிட்ட நிர்வாக பணிகளில் பணியாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளர் உள்ளிட்ட நிர்வாக பணிகளில் பணியாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Deputy Manager (Technical): 1 இடம் (எஸ்டி). சம்பளம்: ரூ.32,900 - 58,000. வயது: 35க்குள். தகுதி: Electrical/ Electronics/ Instrumentation & Control/ Electronics & Communication/ Mechanical/ Manufacturing/ Industrial/ Production/ Power பாடப்பிரிவுகளில் பி.இ.,/ பி.டெக்., பட்டம் பெற்று Finance/ Power பாடத்தில் MBA/ PGP/ PGDM/ PGDBM/ PGDBA முடித்து 7 வருட பணி அனுபவம். சம்பளம்: ரூ.32,900 - 3% - 58,000. வயது: 35க்குள்.
2. Assistant Manager (Administration):2 இடங்கள் (பொது - 1, எஸ்டி - 1). சம்பளம்: ரூ.29,100 - 3% - 54,500. தகுதி: மனித வளம் பாடத்தில் முதுநிலை பட்டம்/ டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல் பாடப்பிரிவில் பி.இ.,/ பி.டெக் பட்டம் பெற்று 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Assistant Manager (Technical):1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.29,100 - 3% - 54,500. தகுதி: IT/ CS பாடத்தில் பி.இ.,/ பி.டெக்., பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம். வயது: 33க்குள்.
4. Officer (Finance):2 இடங்கள் (பொது - 1, மாற்றுத்திறனாளி - 1). சம்பளம்: ரூ.24,900 - 50,500. வயது: 29க்குள். தகுதி: இளநிலை பட்டம் பெற்று சிஏ/ ஐசிடபிள்யூஏ முடித்து ஒரு வருட பணி அனுபவம்.
5. Junior Officer: 3 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.12,600 - 32,500. வயது: 36க்குள். தகுதி: இளநிலை பட்டம் பெற்று மனித
வளம் பாடத்தில் முதுநிலை பட்டம்/ டிப்ளமோ முடித்து 8 வருட பணி அனுபவம்.
6. Translator (Hindi):2 இடங்கள் (பொது - 1, மாற்றுத்திறனாளி - 1). சம்பளம்: ரூ.15,500 - 34,500. வயது: 31க்குள். தகுதி: இந்தி பாடத்தில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு முதுநிலை பட்டம் பெற்று English to Hindi மற்றும் Hindi To English Translationல் 3 மாத பயிற்சி முடித்து 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம்: ரூ.500. இதை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் செலான எடுக்க வேண்டும். எஸ்சி.,/ எஸ்டி/ மாற்றுத்திறனாளி/ முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தகுதியானவர்கள் www.pfcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். பிரின்ட் அவுட்டை தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சாதாரண தபால்/ விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 12.12.2016.
பிரின்ட் அனுப்ப கடைசி நாள்: 16.12.2016.