இந்தியாவில் இயங்கி வரும் தனியார் துறை ஷெட்யூல்டு வங்கிகளில் கரூர் வைஸ்யா வங்கிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துவங்கப்பட்டுபல ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வரும் இந்த பழமையான வங்கியின் செயல்பாடுகள் அனைத்தும் முற்றிலும் புதுமையானவை. நவீனமய வங்கிச் செயல்பாடு, சிறந்த வாடிக்கையாளர் சேவை, நாடு தழுவிய கிளைகள் என்று பல்வேறு காரணங்களுக்காக இந்த வங்கி வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.சிறந்த தனியார் துறை வங்கிக்கான விருதையும் இந்த வங்கி பல முறைவென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கியில் துணை மேலாளர்காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.தேவைகள்:கே.வி.பி.,யின் அஸிஸ்டெண்ட் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 31.07.2013 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முழு நேரப் படிப்பாக குறைந்த பட்சம்50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பிரிவில் முது நிலைப் பட்டப் படிப்பு அல்லது பி.இ., அல்லது பி.டெக்., படிப்பைமுடித்தவர்கள் இந்தப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி முறைமுடிந்து வங்கியில் சேரும் போது இதற்கான ஆவணத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.மற்றவை:கரூர் வைஸ்யா வங்கியின் துணை மேலாளர் - ஸ்கேல் 1 பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.500/-க்கான டி.டி.,யை The Karur Vysya Bank என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும்.இந்த டி.டி.,யை பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஆன்-லைன் முறையிலான எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற நிலைகளில் இந்தப் பதவிக்கான தேர்ச்சி இருக்கும். இந்த தேர்வு தமிழ் நாட்டில் தேர்வு செய்யப்பட்ட சில மையங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கான விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை பின்வரும் இணையதளத்திற்கு சென்று அறியவும்.
முகவரி:
The Karur Vysya Bank Limited,
Central Office & HRD,
Erode Road,
Karur - 639 002
விண்ணப்பிக்க இறுதி நாள் :17.08.2013
இணையதள முகவரி :www.kvb.co.in
No comments:
Post a Comment