TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

ஸ்டாப் செலக்சன் கமிஷன் அறிவித்துள்ள மொழிபெயர்ப்பாளர் பதவிகள்.

மத்திய அரசின் பணி இடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு தேர்வுகளை நடத்தி காலிப் பணி இடங்களை நிரப்பி வருகிறது. எஸ்.எஸ்.சி., தற்போது ஜூனியர் டிரான்ஸ்லேட்டர் (சி.எஸ்.எல்.ஓ.,) பதவிக்கான எழுத்துத் தேர்வை அறிவித்துள்ளது.தேவைகள்:எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள பொது எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள விரும்புபவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுநிலைப் பட்டப் படிப்புக்கு நிகரான படிப்பில் ஆங்கிலம் அல்லது இந்தியை ஒரு பாடமாகவோ, அல்லது இதே அளவிலான படிப்பை இந்தி அல்லது ஆங்கிலமொழி வாயிலாகவோ, அல்லது இதே அளவிலான படிப்பில் இந்தி அல்லது ஆங்கிலத்தை ஒரு விருப்பப் பாடமாகவோ படித்திருக்க வேண்டும்.இதனுடன் இந்தியிலிருந்து ஆங்கிலம் அல்லது ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மொழி மாற்றம் செய்யும் சான்றிதழ் படிப்பு, மற்றும் இந்த துறையில் இரண்டு வருட பணி அனுபவம் தேவைப்படும். எழுத்துத்தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டில் சென்னையில் எதிர்கொண்டு வெற்றிகரமாக தேர்ச்சி பெற வேண்டும்.இதர தகவல்கள்:ஸ்டாப் செலக்சன் கமிஷனின் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பங்களை நிரப்பி உரிய மண்டல அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Regional Director (SR),
Staff Selection Commission,
EVK Sampath Building,
2nd Floor,
College Road,
Chennai,Tamil Nadu - 600006

விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் :30.08.2013

இணையதள முகவரி:
http://ssc.nic.in/notice/examnotice/Notice%20JHT%202013.pdf

No comments:

Post a Comment