TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

இந்திய இராணுவத்தில் 70 அதிகாரி பணிகள்.

சென்னையில் உள்ள ஆபிசர்ஸ் ட்ரைனிங் அகாடமியில் ராணுவ பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 70-க்கும் மேற்பட்ட அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள்ஏதேனும் ஒரு பணிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.ஒன்றுக்கு மேல் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.இந்திய ராணுவத்தின் இணைய தளமான www.joinindianarmy.nic.in-ல் வழங்கப்பட்டுள்ள குறிப்புகளை நன்கு படித்து அதன் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இந்திய குடிமக்கள் மட்டுமன்றி, பூட்டான், நேபாள் மற்றும் 1962-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன் இந்தியாவிற்கு வந்த திபெத்திய அகதிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.அதோடு மட்டுமின்றி, பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இந்திய விமானப் படை, கப்பல் படை, ஆபீசர்ஸ் ட்ரைனிங் அகாடமி உள்ளிட்டவற்றிலிருந்து ஒழுங்கின்மை காரணமாக வெளியேற்றப்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை www.joinindianarmy.nic.in காணலாம்.

அடிப்படைத் தகுதிகள்:

சென்னை ஆபிசர்ஸ் ட்ரைனிங் அகாடமியில் அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் அடிப்படைத் தகுதிகள் குறித்து காணலாம்.பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும், குறிப்பாக, Civil, Manufacturing, Industrial Engineering உள்ளிட்ட பிரிவுகளில் B.E அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும். பொறியியலில்இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகளும் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தங்களின் சான்றிதழ்களை சமர்பிக்கவில்லை எனில், பயிற்சி காலத்தின் போது 12 வாரங்களுக்குள் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.அதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்களுக்கு உளவியல் தேர்வு நடத்தப்படும். இதில், தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு இறுதியாக மருத்துவ பரிசோதனைத் தேர்வு நடத்தப்படும்.மருத்துவ பரிசோதனையில் தேர்ச்சி பெறுபவர்கள் சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் ட்ரைனிங் அகாதமியில் 49 வார கால பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்படுவர். இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.joinindianarmy.nic.in காணலாம்.

வயது வரம்பு குறித்த விவரங்கள்:

சென்னையில் உள்ள ஆபிசர்ஸ் ட்ரைனிங் அகாதமியில் ராணுவ பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியில் சேர விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்புகுறித்த விவரங்களை இனி காணலாம்.Short Service Commission Technical பிரிவில் விண்ணப்பிக்கும் ஆண் விண்ணப்பதாரர்கள் 20 வயதிலிருந்து 27 வயதிற்கு உட்பட்டவராகஇருக்க வேண்டும். Short Service Commission Technical பிரிவில் விண்ணப்பிக்கும் பெண் விண்ணப்பதாரர்களும் 20 வயதிலிருந்து 27 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவி அல்லது மாற்றுத் திறனாளியாக இருப்பின் 5 வருடம் வரை வயது தளர்வு அளிக்கப்படுகிறது. Short Service Commission Women course Non-Technical பிரிவிற்கு விண்ணப்பிப்போர் 19 வயதிலிருந்து 29 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.Short Service Commission Women course Technical பிரிவிற்கு விண்ணப்பிப்போர் 20 முதல் 31 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். இதற்கு இணைய தளத்தில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16-ஆம் தேதி கடைசிநாள். மேலும் விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தில் காணலாம்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.இணைய தளம் மூலம் அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in-ல் வழங்கப்பட்டுள்ள குறிப்புகளை படித்து அதன் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.ஒவ்வொரு காலத்தையும் பூர்த்தி செய்யும் போது அது தொடர்பான சான்றிதழ்களை விண்ணப்பதாரர்கள் வைத்திருப்பது அவசியம். பூர்த்திசெய்து முடித்த பின்னர் விண்ணப்பதாரர்கள் இரண்டு விண்ணப்ப நகலை பெற்றுக்கொள்ள வேண்டும்.பிரதி எடுக்கப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி சான்றிதழ் நகல்களில் கையொப்பமிட்டு விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களின் சான்றிதழ்களை நேர்காணலின் போது சமர்பித்தால் மட்டும் போதும்.எக்காரணத்தைக் கொண்டும் விண்ணப்பத்தையோ, சான்றிதழையோ அனுப்பி வைக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பது தொடர்பான கூடுதல் விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற தளத்தில் காணலாம்.

No comments:

Post a Comment