தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சமூக கணக்குத்தணிக்கை(SASTA) பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப் பஞ்சாயத்துகளில் நடைபெறும் பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் செயலாக்கப் பணிகளைக் கண்காணிக்க ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சமூக கணக்குத் தணிக்கையை மேற்கொள்ள இந்த பிரிவை தொடங்கியுள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களிலும் சமூக தணிக்கைப் பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.மொத்த பணியிடங்கள்:125பணியும் பணிக்கோடும்:
1. மாவட்ட அளவி ஆதாரப் பணி (DRP01) - 44
2. வட்டார அளவிலான ஆதாரப் பணி(BRP01) - 770
3. மாவட்ட அளவிலான அலுவலக ஒருங்கிணைப்புப் பணி(SSD01) - 31.
இந்த பணிக்கு ஏற்கனவே ஊராட்சித் துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். (மாவட்டத்துக்கு ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்)கல்வித்தகுதி:மாவட்ட மற்றும் வட்டார அளவிலான ஆதாரப் பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதேனும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் ஐந்து - எட்டு ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.மாவட்ட அளவில் அலுவலக ஒருங்கிணைப்புப் பணிக்கு கணினி துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் குறைந்த பட்சம் ஒரு வருடமாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்:மாவட்ட அளவி ஆதாரப் பணிக்கு மாதம் ரூ.20,000 + நிர்ணய ஊதியப் படியாக ரூ.1,500 + தொலைபேசி கட்டணமும் வழங்கப்படும்.வட்டார அளவிலான ஆதாரப் பணிக்கு மாதம் ரூ.12,000, நிர்ணய ஊதியப் படியாக ரூ.1000 + தொலைபேசி கட்டணமும் வழங்கப்படும்.மாவட்ட அளவில் அலுவலக ஒருங்கிணைப்புப் பணிக்கு மாதம் ரூ.12,000 ஊதியம் வழங்கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை:http://tnmhr.com/sasta.html என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.எழுத்து தேர்வு நடைபெறும் தேதி:செப்டம்பர் முதல் தேதிகளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:19.08.2013மேலும் பணி மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://tnmhr.com/sasta.html என்றஇணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment