மத்திய அரசின் கீழ் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் விசாக் ஸ்டீல் நிறுவனத்தில் ராஷ்ட்ரிய இஸ்பட் நிகாம் லிமிடெடில் நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடங்களை டெக்னிகல் மற்றும் நான்-டெக்னிகல் என்ற இரண்டு பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியும் - பணியிடங்களும்:மொத்த நிரப்பப்படும் பணியிடங்கள்:டெக்னிக்கல் பிரிவில் - 109, நான்-டெக்னிக்கல் பிரிவில் - 11விசாக் ஸ்டீல் நிறுவனத்தின் டெக்னிகல் பிரிவு மேனேஜ்மெண்ட் டிரெய்னி பதவியில் கெமிக்கல் பிரிவில் - 05, சிவில் பிரிவில்- 04, எலெக்ட்ரிகல் பிரிவில் - 29, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் பிரிவுகளில் - 03, இண்டஸ்ட்ரியல்பொறியியல் பிரிவில் - 02, மெக்கானிகல் பிரிவில் - 31, மெட்டலர்ஜி பிரிவில் - 32. நான்-டெக்னிகல் பிரிவில் நிதித்துறையில் - 06, எச்.ஆர் பிரிவில் - 04, கார்ப்பரேட்கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் - 01.வயதுவரம்பு:விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.02.1986-க்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும்.கல்வித்தகுதி:டெக்னிகல் பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தொடர்புடைய துறையில் முழு நேரப் படிப்பாக பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.நான்-டெக்னிகல் பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போன்று கல்வித் தகுதி மாறுபடுவதால் முழுமையான விவரங்களுக்கு இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்விண்ணப்பக் கட்டணம்:பொது பிரிவினருக்கு ரூ.100. இதனை கோர் வங்கி செயல்பாடுடைய பாரத ஸ்டேட் வங்கியில் RINL/VSP Recruitment Account No. 30589461220 என்ற அக்வுண்ட் எண்ணில் செலுத்த வேண்டும்.தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 மட்டும் செலுத்தினால் போதுமானது.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:20.07.2013மேலும் முழுமையான தகவல்களை பெற http://eproc.vizagsteel.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் நிர்வாகப் பயிற்சியாளர் பணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment