TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் டெக்னிக்கல் பணி.

மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (Nuclear Power Corporation) ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். இவை மின்உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு 1987ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் குஜராத்தில் செயல்பட்டு வரும் கிளையில் ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியும் - பணியிடங்களும்:டிப்ளமோ, பி.எஸ்சி பட்டதாரிகள், பிளாண்ட் ஆஃப்ரேட்டர், பிட்டர் மற்றும் மெஷின்ஸ்ட் என்ற நான்கு பிரிவுகளின் கீழ் பணிகள் நிரப்பப்பட உள்ளன.இவற்றில் டிப்ளமோ பிரிவில் 21 இடங்களும், பி.எஸ்சி பிரிவில் 21 இடங்களும், பிளாண்ட் ஆபரேட்டர் பிரிவில் 45 இடங்களும், மெஷினிஸ்ட் பிரிவில் 49 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.வயதுவரம்பு:முதல் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 25-க்குள் இருத்தல் வேண்டும். மூன்றாவது மற்றும் நான்காவது பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 24-க்குள் இருத்தல் வேண்டும்.கல்வித்தகுதி:டிப்ளமோ ஹோல்டர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிகல், எலக்ட்ரானிக்ஸ் அல்லதுகெமிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.இரண்டாவது பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்பியல் அல்லது வேதியியலில் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.பிளான்ட் ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் +2 இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடப்பிரிவில் முடித்திருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.மெஷினிஸ்ட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், எலெக்ட்ரீசியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் அல்லது மெஷினிஸ்ட் உள்ளிட்ட ஏதாவதொரு துறையில் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.உயரம் மற்றும் எடை:மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச உயரமாக 160 செ.மீ.,யும், எடை 45.05 கிலோவும் இருக்க வேண்டும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:31.07.2013விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.npcil.nic.in/main/JobsRecent.aspx என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment