இந்திய விமானப் படையில், விளையாட்டு வீரர்களுக்கான பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தடகளம், நீச்சல், கூடைப் பந்து, கால்பந்து, ஹாக்கி, மல்யுத்தம், பளு தூக்குதல் உள்ளிட்ட 18 விளையாட்டு போட்டிகளில் திறமை உடையவர்கள் இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விளையாட்டு வீரர்களுக்கான 'Y' பிரிவின் கீழ், இந்த விளையாட்டு வீரர்கள் பணியில் அமர்த்தப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, 24 மாத அளவிலான தொழில்நுட்பம் அல்லாத பயிற்சிகள் வழங்கப்படும்.வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்களுக்கு, 20 ஆண்டு கால பணி நியமனம் செய்யப்படுவர். இந்திய குடியுரிமை உள்ள திருமணமாகாத ஆண்விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம். பணியில் பெறும் தர மதிப்பீட்டின் படி, 57 வயது வரை பணி நீட்டிப்பு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.கல்வித் தகுதி, உடல் தகுதி தேர்வின் அடிப்படையில் தேர்ச்சி முடிவு செய்யப்படும். தகுதியுடைய தேர்வர்களுக்கு, நேர்காணல் மற்றும் தேர்வு குறித்த தகவல்களுடன் அழைப்பாணை அனுப்பப்படும்.அடிப்படைத் தகுதிகள்:இந்திய விமானப் படையில், நிரப்பப்பட உள்ள விளையாட்டு வீரர்களுக்கான காலிப் பணியிடங்களில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.குறைந்தது 10-ஆம் வகுப்பு அல்லது +2 படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 1992-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதிக்கு பின்னரும், 1996-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதிக்கு முன்னரும் பிறந்திருக்க வேண்டியதும் அவசியம். குறைந்தது 153சென்டி மீட்டர் உயரமும், வயதுக்கும் உயரத்திற்கும் ஏற்ற எடையுடனும் இருக்க வேண்டும்.சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும். தேசிய அளவிலான போட்டிகளில் அல்லது பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் குறைந்தது 5-வது இடத்தைப் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அணி விளையாட்டுகளில், School Games Federation of India நடத்திய தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:இந்திய விமானப் படையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விளையாட்டுவீரர்கள் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.விண்ணப்பப் படிவ மாதிரி ஏப்ரல் 6 முதல் 12-ஆம் தேதி வரையிலான Employment News செய்தித் தாளில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், விண்ணப்பங்களை 'A4' அளவு தாளில் தட்டச்சு செய்து உருவாக்கவும். விண்ணப்பப் படிவத்துடன் கடந்த 3 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படத்தை இணைத்து அனுப்பவும்.புகைப்படத்தில் விண்ணப்பதாரரின் பெயர், பிறந்த நாள் உள்ளிட்டவற்றை தெளிவாக குறிப்பிடவும். Gazetted Officer-ன் கையொப்பம் பெற்ற பள்ளிச் சான்றிதழ் மற்றும் விளையாட்டு சாதனைக்கான சான்றிதழ் நகல்கள் உள்ளிட்டவற்றை இணைத்துவிண்ணப்பிக்கவும்.நேர்காணலுக்கு அழைக்கப்படும் போது 4 புகைப்படங்கள், கல்விச் சான்றிதழ்களின் அசல், விளையாட்டுத் துறை சாதனைகளுக்கான அசல் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:Secretary, Air Force Sports Control Board, C/O, 412, Air Force Station, Race Course, New Delhi - 110 003.விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Home
Unlabelled
இந்திய விமானப் படையில் விளையாட்டு வீரர்களுக்கான பல்வேறு பணிகள்.
இந்திய விமானப் படையில் விளையாட்டு வீரர்களுக்கான பல்வேறு பணிகள்.
Share This
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment