TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

இந்திய ராணுவத்தில் பல்வேறு பணிகள்.

இந்திய ராணுவத்தில் சேர தொழில்நுட்பப் படிப்பை முடித்தவர்களிடம்இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்திய குடியுரிமை பெற்ற ஆண்கள் மட்டுமே இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய www.joinindianarmy.nic.inஎன்ற இணைய தளத்தை அணுகவும்.TGC எனப்படும் தொழில்நுட்பம் சார்ந்த பொறியியல் பட்டப் படிப்பை முடித்தவர்கள் மற்றும் ராணுவக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்புகளான M.A. அல்லது M.Sc. இவற்றில் ஏதேனும்ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மே மாதம் 15-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 13-ஆம் தேதி வரை இணைய தளத்தில் பெயர்களை பதிவு செய்யலாம். வயது வரம்பு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள www.joinindianarmy.nic.inஎன்ற இணைய தளத்தையும், Employment News செய்தித்தாளையும்பார்க்கவும்.

No comments:

Post a Comment