தஞ்சாவூரில் உள்ள பிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், இணைப் பேராசிரியர் நிலையில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, மதுரை, சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் இயக்குநர், முதல்வர், பேராசிரியர், இணைப் பேராசிரியர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.Computer Science Engineering, Civil Engineering, Electricals and Electronics Engineering, Electronicsand Communication Engineering, Mechanical Engineering ஆகிய அடிப்படைப் பொறியியல் துறைகளிலும், கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் ஆகிய பிரிவுகளிலும் காலிப் பணியிடங்கள் உள்ளன.விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் ஊதியம் போன்றவை அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுமத்தின் வழிகாட்டுதல்படி நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.விண்ணப்பிக்க விரும்புவோர், பணியாற்ற விரும்பும் இடத்தைக் குறிப்பிட்டு, சுயவிவரக் குறிப்புகளை 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:வேந்தர், பிரைஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர் - 613 403.கூடுதல் தகவல்களுக்கு www.prist.ac.inஎன்ற இணைய தளத்தை அணுகவும்.
பிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், இணைப் பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment