இந்திய ஒலிபரப்பு கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரசார் பாரதி நிறுவனத்தில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகளில் சேர்வதற்கான தேர்வை, SSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.புரோகிராம் எக்சிகியூட்டிவ் மற்றும் டிரான்ஸ்மிஷன் எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட 1166 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் புரோகிராம் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கு 360 பேரும், டிரான்ஸ்மிஷன் எக்சிகியூட்டிவ் பணிக்கு 806 பேரும், டிரான்ஸ்மிஷன் எக்சிகியூட்டிவ் Production Assistant பணிக்கு 72 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.தேர்வு செய்யப்படுவோர் பிரசார் பாரதி நிறுவன அலுவலங்களில் பணியில் அமர்த்தப்படுவர். கல்வித் தகுதி, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்ச்சி முடிவு செய்யப்படும். கூடுதல் விவரங்களைப் பெற www.ssconline2.comஎன்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.இந்தத் தேர்வில் பங்கேற்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள்:மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரசார் பாரதி நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.புரோக்ராம் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கு, எம்.ஏ., எம்.எஸ்.சி., படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இலக்கியம், நாடகக்கலை, டிபேட்டிங் ஆக்டிவிட்டிஸ், பப்ளிகேஷன்ஸ், பாப்புலர் சயின்ஸ் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் சான்றிதழ் படிப்பையும் முடித்திருக்க வேண்டும். இது தவிர காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மண்டல மொழியறிவும் அவசியம்.அல்லது இளநிலைப் படிப்புடன், நாடகக் கலை, இயக்கம், சினிமாட்டோகிராபி, சவுண்ட் ரெக்கார்டிங், சவுண்ட் டிசைன், எடிட்டிங், Art Direction and Production இவற்றில் ஏதேனும் ஒரு 2 ஆண்டு கால பட்டயப் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இசையில் சான்றிதழ் படிப்பு, 2 ஆண்டுஇதழியல் சான்றிதழ் படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.டிரான்ஸ்மிஷன் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கு இளநிலைப் படிப்புடன் டிரான்ஸ்மிஷன் சார்ந்த பட்டயப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனங்களில் முடித்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு www.ssconline2.comஎன்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.இந்தத் தேர்வில் பங்கேற்பதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:மத்திய அரசு நிறுவனமான பிரசார் பாரதியில், புரோகிராம் எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்பதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம். .விண்ணப்பங்கள் www.ssconline2.comஎன்ற இணையதளத்தில் கிடைக்கும். பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை.விண்ணப்பக் கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளைகளில் செலான் மூலமாகவும், ஆன்லைன் பேங்கிங் மூலமும் செலுத்தலாம். விண்ணப்பத்தோடு சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப தேவையில்லை.நேர்முகத் தேர்வின் போது உரிய சான்றிதழ்களை கொண்டு சென்றால் போதுமானது. விண்ணப்பிக்க ஏப்ரல் 19-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு ஜூன் 2-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Home
Unlabelled
பிரசார் பாரதி நிறுவனத்தில் 1166 காலிப் பணிகள்.
பிரசார் பாரதி நிறுவனத்தில் 1166 காலிப் பணிகள்.
Share This
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment