TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பஞ்சாப் & சிந்து வங்கியில் அதிகாரி பணி.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்:
General Manager - (IT). Cheif Managers (IT), Chief Managers (Risk Management)
கல்வித்தகுதி:
General Manager - (IT) - பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகளில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது 50 முதல் 55க்குள் இருக்க வேண்டும்.Cheif Managers (IT) - கம்ப்யூட்டர் சயின்ஸ்/தகவல் தொழிற்நுட்ப பாடத்தில் பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொதுத்துறை/தனியார் துறையில் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது 35 முதல் 40க்கு இருக்க வேண்டும்.Chief Managers (Risk Management)- ஏதாவதொரு முதுநிலை பட்டப்படிப்புடன் எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது 35 முதல் 40க்கு இருக்க வேண்டும்.தேர்ந்தெடுக்கப்படும் முறை:விண்ணப்பதாரின் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்வு மற்றும் குழு விவாதத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
www.bsb-india.com என்றஇணையதளத்தில் விண்ணப்ப படிவ மாதிரியை ஏ4 தாளில் தயார் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். ரூ.200 கட்டணத்தை வரைவோலை எடுத்து இணைக்கவும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு www.bsb-india.comஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment