TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகள்.

மதுரையில் உள்ள வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். இதற்கான விளம்பரங்கள் வெளியாகியுள்ளன..மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் Civil Engineering, Computer Science Engineering, Electronics and Communication Engineering, Information Technology, Mechanical, Maths, Physics மற்றும் MBA ஆகிய பிரிவுகளில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தக் கல்லூரியில் பேராசிரியர், துணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், உடற்கல்வி உதவி இயக்குநர், System Administrator மற்றும் Lab Assistant பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.AICTE எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியுடைவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மார்ச் 30ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.விண்ணப்பங்களை, உரிய சான்றுகளுடன், அனுப்ப வேண்டிய முகவரி:வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை - ராமேஸ்வரம் முக்கிய சாலை, விரகனூர், மதுரை - 625 009.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு AICTE நிர்ணயித்துள்ள ஊதியம்மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு www.vect.ac.inஎன்ற இணைய தளத்தைப் பார்க்கவும். மேலும், 0452 - 2465 849 அல்லது 0452 - 2465 285 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.

No comments:

Post a Comment