TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

குமரகுரு காலேஜ் ஆப் டெக்னாலஜியில் பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகள்.

கோயமுத்தூரில் உள்ள குமரகுரு காலேஜ் ஆப் டெக்னாலஜியில் பல்வேறு பேராசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.பேராசிரியர், துணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. சிவில், மெக்கானிக்கல், மெக்காட்ரானிக்ஸ், ஏரோ நாட்டிக்கல், ஆட்டொமொபைல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்கல் உள்ளிட்ட பல்வேறு பொறியியல் சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் உள்ளன.இதே போல், கணினி அறிவியல், பயோ டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் டெக்னாலஜி, கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பிரிவுகளிலும் காலிப் பணியிடங்கள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் 6-வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதியம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வித் தகுதி மற்றும் கல்வித் துறை சார்ந்த வேலைகளில் பணிபுரிந்த அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.கூடுதல் விவரங்களுக்கு www.kct.ac.inஎன்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.அடிப்படைத் தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:கோயமுத்தூரில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில், பேராசிரியர் பணிக்கு பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கானவிளம்பரங்கள் வெளியாகியுள்ளன. இந்த பணியிடங்களில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.தேர்வு கட்டுப்பாட்டு இயக்குநர், தேர்வு ஒருங்கிணைப்பாளர், கல்வி பொது விவகாரங்களுக்கான தலைவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தொடர்புடைய துறையில், 10 ஆண்டுகள் முன் அனுபவம் அல்லது 20 ஆண்டுகள் தொழில்சார்ந்த அனுபவம் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விடுதிக் காப்பாளர் பணிக்கு, 40 வயதுக்கு உட்பட்ட இளநிலைப் பட்டப் படிப்பை முடித்து 10 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவர்கள்விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி மற்றும் அனுபவத்திற்கான சான்றுகளின் நகல்கள் மற்றும் சுயவிவரக் குறிப்புகளுடன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 4-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயமுத்தூர் - 641 049.கூடுதல் விவரங்களுக்கு www.kct.ac.inஎன்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment