இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் Central Avian Research Institute (CARI)-ல் ஏற்பட்டுள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Lab Technician, Field/Farm, Workshop (Technician)
கல்வித்தகுதி: 10 வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு வருட சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டபின் எழுத்துத்தேர்வு அல்லது நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதன் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 வரைவோலை எடுக்க வேண்டும்.(எஸ்சி.எஸ்டி., பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது).
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல் இணைக்க வேண்டும்.
அக்டோபர் 8 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை Administrative Officer, Central Avian Research Institute, Izatnagar - 243122 என்ற முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment