TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பாரதியார் பல்கலைக்கழகம்: 7-ல் விரிவுரையாளர் தகுதித் தேர்வு


பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படவுள்ள உதவிப் பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர்களுக்கான, மாநில தகுதித் தேர்வு அக்.7-ம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 10 முதன்மைத் தேர்வு மையங்கள் மூலமாக 76 தேர்வு மையங்களில் இத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு 65,243 பேர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு தபாலில் அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. கிடைக்கப் பெறாதவர்கள் 0422-242 8173, 242 8195 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு மைய தகவல்கள் குறித்து www.bu-ac.in/set2012 என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment