TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிற்பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிற்பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட இருக்கிறது. இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைசெல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பொதுமேலாளரால் இளநிலை கைவினைஞர் பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு குறிப்பிட்ட தகுதியை பெற்றிருக்க வேண்டும்.முதலில் 10-வது தேர்ச்சி பெற்று, அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மோட்டார் மெக்கானிக், வெல்டர், எலக்ரீசியன் உள்ளிட்டவைகளில் சான்றிதழ் பெற்று தொழில் பழகுநர் முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு 1.7.2012 அன்றைய நாளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 வயது முதல் 40 வரையிலும், பிற்பட்ட வகுப்பினர் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 18 வயது முதல் 35 வயது வரையிலும், இதர வகுப்பினருக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இவர்களுக்கான உத்தேசபதிவு மூப்பு முன்னுரிமை உடைய பதிவுதாரர்களுக்கு இன்றைய தேதி வரையில்(கலப்பு திருமணம் புரிந்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர், மற்றும் ராணுவத்தில் பணிபுரிபவரைச் சார்ந்தவர்கள், உடல் ஊனமுற்றோர்), முன்னுரிமையற்றவர்கள் மோட்டார் மெக்கானிக் பிரிவு-31.12.2000 வரையிலும், வெல்டர் பிரிவு 31,12.2003 வரையிலும், எலக்ரீசியன் பிரிவு-31.12.2000 வரையிலும் பதிவு செய்திருக்க வேண்டும். இக்குறிப்பிட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் பதிவு மூப்புடையவிருதுநகர் மாவட்ட பதிவுதாரர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட இருக்கிறது. அதனால், சம்பந்தப்பட்ட பதிவுதாரர்கள் அனைவரும் அனைத்து சான்றிதழ்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகிற 27,28 ஆகிய நாள்களில் (திங்கள்கிழமை, செவ்வாய்கிழமை)நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைசெல்வி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment