மதுரை மாவட்டத்தில் சீருடை பணியாளர்களுக்கான தேர்வு இன்று துவங்கியது. சுமார் 1200 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கான உடற்கூறு தேர்வு,ஓட்டப்பந்தயம் உள்ளிட்டவை நடைபெற்றது. தேர்வை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது, மதுரை மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வுக்கு 6,667 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட தேர்வு 6 நாட்களும், 2ம் கட்ட தேர்வு 6 நாட்களும் என 12 நாட்கள் தேர்வு நடைபெற உள்ளது.ஒவ்வொரு நாளும் 1200 பேர் அழைக்கப்படுவார்கள். இவர்கள் உயரம், மார்பளவு சரிபார்க்கப்படும். இதில் ஒரு செமீ வேறுபாடு இருப்பின் எஸ்பியும், டிஎஸ்பியும் மீண்டும் தேர்வு நடத்துவார்கள். 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 7 நிமிடத்தில் முடிக்க வேண்டும்.அவ்வாறு முடிப்பவர்கள் மட்டுமே அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment