தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர்பணிக் காலியிடங்களுக்கு தகுதிவாய்ந்த பதிவுதாரர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர். இதற்கான பதிவு மூப்பு பட்டியல்திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உள்ளது.செவ்வாய்கிழமை ஓட்டுநர் பதவிக்கும், புதன்கிழமை நடத்துனர் பதவிக்கான பட்டியலை சரிபார்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம்வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.ஓட்டுநர் பணியிடம் : 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்ட கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று அதை பதிவு செய்திருக்க வேண்டும். 1.7.2012 அன்று ஆதிதிராவிட வகுப்பினர், பழங்குடியினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், பின்தங்கிய வகுப்பினர் 45 வயதுக்குள்ளும், முற்பட்ட வகுப்பினர் 40 வயது உடையவராகவும் இருக்க வேண்டும்.முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை உண்டு. அனைத்து வகுப்பைச் சேர்ந்தவர்களும் குறைந்தபட்சம் 24 வயது நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்.நடத்துனர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று நாளது தேதி வரை பதிவினை புதுப்பித்திருக்க வேண்டும். 1.7.12 அன்று ஆதிதிராவிடர், பழங்குடியினர் 40 வயதுக்குள்ளும், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், பின்தங்கிய வகுப்பினர் 35 வயதுக்குள்ளும், முற்பட்ட வகுப்பினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை உண்டு. அனைத்து வகுப்பைச் சேர்ந்தவர்களும் குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருக்க வேண்டும்.இது தொடர்பாக மேலும் விவரம் அறிய விரும்புவோர் திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை (தொலைபேசி எண் 0451 2461498) தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மாநில போக்குவரத்துக் கழகத்தில் பணி : பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment