TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

அங்கன்வாடி பணியிடங்கள்: மகளிர் விண்ணப்பிக்கலாம்.

அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் நகராட்சி,அரியலூர் ஊரகம்,ஜயங்கொண்டம் நகராட்சி,உடையார்பாளையம் பேரூராட்சி,ஜயங்கொண்டம் ஊரகம்,ஆண்டிமடம் ஊரகம்,வரதராஜன்பேட்டை பேரூராட்சி,செந்துறை தா.பழூர்,திருமானூர் ஆகிய வட்டாரங்களில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில்

காலியாக உள்ள 90 அங்கன்வாடி பணியாளர்கள், 83 அங்கன்வாடி பணியாளர்கள், 234 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்களுக்கு இனச்சுழற்சி முறையில் நேர்முகத் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்ய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.7.2017 அன்று 25 வயது முடிந்து, 35 வயதுக்கு மிகாத,கணவரை இழந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு அதிகப்பட்ச வயது 35 முதல் 40 என கணக்கிடப்பட்டுள்ளது.  மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு 20 வயது எனவும்,குறைந்தப்பட்சமாக  எட்டாம் வகுப்பு தேர்ச்சி என தளர்வு செய்யப்பட்டுள்ளது.
இதர இனங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி தேவை.
விண்ணப்பிப்போர் அதே கிராமத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். அதே கிராமத்தில் இல்லாவிடில் கிராம ஊராட்சியைச் சேர்ந்த அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

வசிப்பிட ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டை,வீட்டுவரி ரசீது,குடும்ப அட்டை,ஆதார் அட்டை ஆகிய ஏதேனும் ஒரு சான்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதற்குரிய விண்ணப்பங்களை மாவட்ட இணையதளமான w‌w‌w.​a‌r‌i‌y​a‌l‌u‌r.‌n‌i​c.‌i‌n-ல் பதிவிறக்கி விண்ணப்பிக்கலாம்.
மேலும் அந்தந்தப் பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பம் பெற்று நிறைவு செய்து 17.8.2017 மதியம் 12 மணிக்குள் அங்கேயே அளிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட திட்ட அலுவலர், அறை எண். 210, 2-வது தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், அரியலூர் 621704 என்ற முகவரியில் அணுகலாம் என ஆட்சியர் க. லட்சுமிபிரியா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment