TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

ராணுவத்தில் கால்நடை அதிகாரி வேலை

இந்திய ராணுவத்தின் ஒரு அங்கமாக ‘ரிமவுண்ட் வெட்னரி கார்ப்ஸ்’ பிரிவு செயல்பட்டு வருகிறது. ராணுவப் பணிக்கு பயன்படுத்தப் படும் நாய்கள், குதிரை மற்றும் கால்நடைகளை மருத்துவ ரீதியாக பரிசோதிப்பது, தயார் செய்வது உள்ளிட்ட மருத்துவ பணிகளில் இந்த படைப்பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

இந்த பிரிவில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கால்நடை அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: 01.09.2017 தேதியின்படி 21 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பி.வி.எஸ்சி. மற்றும் அனிமல் ஹஸ்பண்டரி போன்ற பட்டப்படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யும் முறை: நிலை-1, நிலை-2 என இருநிலைகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் குழு தேர்வு, உளவியல் தேர்வு, நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் இதில் நடத்தப்படும். பின்னர் கல்வித் தகுதி மற்றும் அனைத்து தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் வெள்ளைக் காகிதத்தில் குறிப்பிட்ட மாதிரியில் தட்டச்சு செய்து விண்ணப்ப படிவம் தயார் செய்ய வேண்டும். அதில் புகைப் படம் ஒட்டி விவரங்களை நிரப்பி அனுப்ப வேண்டும். அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பயிற்சியின் பெயரை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Directorate General Remount Veterinary Services (RV1).QMG’s Branch. Integrated Headquarters of MoD (Army) West Block 3, Ground Floor, Wing No 4, Rk puram, New Delhi 110066

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.09.2017

No comments:

Post a Comment