TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மின் ஆராய்ச்சி மையத்தில் பொறியியல் துறை முதுகலை பட்டதாரிகளுக்கு பணி.

பெங்களூருவில் செயல்பட்டு வரும் மத்திய மின் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்களிடமிருந்து வரும் 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Associates - 02
சம்பளம்: மாதம் ரூ.25,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் இஇஇ, இசிஇ பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்து பவர் சிஸ்டம், எலக்ட்ராணிக்ஸ், பவர் எலக்ட்ராணிக்ஸ் பிரிவில் முதல் வகுப்பில் எம்.இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cpri.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அஞ்சல் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cpri.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment