TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பாரத ரிசர்வ் வங்கியில் பணி:16க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பாரத ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி மேலாளர் (ராஜ்ய பாஷா)
காலியிடங்கள்: 10  
கல்வித் தகுதி: ஹிந்தியில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: டெக்னிக்கல் மேனேஜர் (சிவில் பிரிவு)
காலியிடங்கள்: 2  
கல்வித் தகுதி: பி.இ. சிவில் இன்ஜினியரிங் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: உதவி மேலாளர் (செக்யூரிட்டி)
காலியிடங்கள்: 7
தகுதி: ராணுவப் படை,  கடற் படை,  விமானப் படை பிரிவுகள் ஏதேனும் ஒன்றில் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேற்கண்ட மூன்று பதவிகளுக்கும் விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 600; ஆதிதிராவிடர்  பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ. 100.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு: https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVT3P010317DCE 800A92DD244EA9E1078D6AF73684A.PDF
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.03.2017

No comments:

Post a Comment