TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

2,804 கிராமப்புற சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

2,804 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
 சென்னை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் காலியாக உள்ள 2,804 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்காக மாநில அளவில் தகுதியுடையோர் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்போர், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் செவிலியர் பயிற்சியைப் பதிவு செய்திருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: தமிழக அரசின் கல்வி நிறுவனம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் செவிலியர் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், 2012-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதிக்கு முன்னர் பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 மாத பேறுகால துணை செவிலியர் கல்வித் தகுதி அல்லது பல்நோக்கு பணியாளர் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
 2012 நவம்பர் 15-க்குப் பின்னர் மேல்நிலை கல்வித் தேர்ச்சியுடன் 2 வருட பேறுகால துணை செவிலியர் கல்வித் தகுதி அல்லது பல்நோக்கு சுகாதார பணியாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 2016 ஜூலை 1-ஆம் தேதிபடி எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ., எம்.பி.சி., பி.சி.எம்., பி.சி. ஆகிய பிரிவினர் 18 முதல் 57 வயது வரை இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 18 முதல் 40 வயது வரை இப்பணிக்கு வரும் விண்ணப்பிக்க இன்று பிப்ரவரி 24-ஆம் தேதி கடைசி தேதியாகும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வங்கிகளில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கு பிப்ரவரி 28 கடைசி நாளாகும்.

 தகுதியுடைய நபர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளமான w‌w‌w.‌m‌rb.‌t‌n.‌g‌o‌v.‌i‌n--ல் இணையதளம் மூலம் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் பள்ளிக் கல்வி மற்றும் தொழிற்கல்வியில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பின்பு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் காலியாக உள்ள இடங்களில் அவர்களை நியமனங்களைச் செய்வார்.

No comments:

Post a Comment