TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மீன்வளத் துறையில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மீன்வளத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூர் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கு அரசாணைப்படி தெரிவிக்கப்பட்டுள்ள இனவாரி சுழற்சி அடிப்படையிலும், தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பொதுபிரிவு முன்னுரிமை பெற்றவர் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு நிகழாண்டு ஜன 1-ம் தேதி 18 வயது முதல் 30 முடிய இருக்க வேண்டும். ஊதியம்: ரூ. 4,800 - 10,000 - தர ஊதியம் ரூ. 1,300.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 873-4, அறிஞர் அண்ணா சாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய நகல் ஆவணங்களுடன் ஜன. 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்கலாம். நேர்முகத் தேர்வுக்கான இடம் மற்றும் நாள் குறித்து விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு 04362 - 235389 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment