TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

TNPSC:, குரூப் 1 தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், மாவட்டப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் மாவட்ட அலுவலர் போன்ற பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.


2015-2016ம் ஆண்டிற்கான குரூப் I முதல் நிலை எழுத்துத் தேர்வு 19.2.2017ம் தேதி அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்டங்களில் அமைக்கப்படும், 32 மையங்களில் நடைபெறும். இந்தத் தேர்வில் பங்கேற்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து வகையினரும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.12.2016
முழுமையான விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

No comments:

Post a Comment