TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

வேலைவாய்ப்பு: தேசிய அனல்மின் கழகத்தில் 117 டிரெய்னீஸ்

சத்தீஸ்கர் மாநிலம் ரெய்கார் மாவட்டம் லாரா, மத்திய பிரதேசம் மாநிலம் நரசைப்பூர் மாவட்டம் காடர்வாரா ஆகிய இடங்களில் உள்ள தேசிய அனல்மின் கழகத்தில் 117 டிரெய்னீஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஐடிஐ படித்தவர்கள், வேதியியல் பட்டதாரிகள், ஸ்டோர் கீப்பிங் பாடத்தில் என்சிடிவிடி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணி: 

Trainee.

தொழிற்பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம்:

1. Vacancies in Lara (Chhattisgarh): 

a. ITI (Fitter) Trainee: 

30 இடங்கள் (பொது - 17, ஒபிசி - 1, எஸ்சி - 3, எஸ்டி - 9).

b. ITI (Electrician) Trainee: 

16 இடங்கள் (பொது - 10, எஸ்சி - 1, எஸ்டி - 5).

c. ITI (Instrument Mechanic) Trainee: 

12 இடங்கள் (பொது - 8, எஸ்சி - 1, எஸ்டி - 3).

d. Assistant (Material Store Keeper) Trainee: 

5 இடங்கள் (பொது - 4, எஸ்டி - 1).

e. Lab Assistant (Chemistry) Trainee: 

6 இடங்கள் (பொது - 5, எஸ்டி - 1).

2. Vacancies in Gadarwara (Madhya Pradesh):

a. ITI (Fitter) Trainee: 

21 இடங்கள் (பொது - 12, ஒபிசி - 3, எஸ்சி - 3, எஸ்டி - 3).

b. ITI (Electrician) Trainee: 

11 இடங்கள் (பொது - 7, ஒபிசி - 1, எஸ்சி - 1, எஸ்டி - 2).

c. ITI (Instrument Mechanic) Trainee: 

8 இடங்கள் (பொது - 5, ஒபிசி - 1, எஸ்சி - 1, எஸ்டி - 1).

d. Assistant (Material/ Storekeeper) Trainee: 

4 இடங்கள் (பொது).

e. Lab Assistant (Chemistry) Trainee: 

4 இடங்கள் (பொது). 

மேற்குறிப்பிட்ட காலயிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் தலா ஒரு இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி:

ITI (Fitter) Trainee/ ITI (Electrician) Trainee/ ITI (Instrument Mechanic) Trainee ஆகிய பணிகளுக்கு பிளஸ்2 தேர்ச்சியுடன் Fitter/ Electrician/ Instrument Mechanic டிரேடில் முழுநேர ஐடிஐ கோர்ஸ் படித்திருக்க வேண்டும்.

Assistant (Material/ Stores keeper): தகுதி: Fitter/ Electrician/ Electronics/ Instrument Mechanic டிரேடில் முழுநேர  ஐடிஐ கோர்ஸ் முடித்து ஸ்டோர்கீப்பிங்கில் என்சிடிவிடி சான்று பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

Lab Assistant Trainee (Chemistry): தகுதி: Chemistry/ Industrial/ Applied Chemistry பாடப்பிரிவுகளில் முழுநேர பிஎஸ்சி. அஞ்சல் வழிக்கல்வியில் படித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்ப கட்டணம்: 

ரூ.300. பொது மற்றும் ஒபிசியினர் இதை NTPC Limited என்ற பெயரில் Raipur, Chhattisgarhல் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டியினருக்கு கட்டணம் கிடையாது.

வயது: 

1.11.2016 தேதிப்படி 27க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும். எழுத்துத்தேர்வு, ஸ்கில்டு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 

ரெய்ப்பூர், பிலாஸ்பூர், ரெய்கார், போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய மையங்களில் எழுத்துத்தேர்வு நடைபெறும். எழுத்து தேர்வில் General awareness, Quantitative Aptitude & Reasoning ஆகிய பாடங்களில் கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் ஆங்கிலம், இந்தியில் அமைந்திருக்கும். ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் கால் மதிப்பெண்கள் குறைக்கப்படும். 

மாதிரி விண்ணப்பத்தை www.ntpccareers.net என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து விரைவு தபால் அல்லது பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: 

DGM (HR-Rectt.), 
NTPC Limited, 
Western Region-II Headquarters, 
4th Floor, Magneto Offizo, 
Labhandi, GE Road, 
N.H.-6, Raipur, 
CHHATTISGARH- 492001.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 22.01.2017.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.12.16.

No comments:

Post a Comment