TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் மைனிங் இன்ஜினியர் பணிகள் 265 காலியிடங்கள் உள்ளன

மத்திய அரசுக்கு சொந்தமான Northern Coalfields Limited நிறுவனத்தில் Junior Overman, Mining Sirdar ஆகிய பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணியிடங்கள் விவரம்:

1. Jr. Overman T & S Grade C: 

197 இடங்கள் (பொது - 100, எஸ்சி - 29, எஸ்டி - 39, ஒபிசி - 29). 

தகுதி: 

Mining Engineering பாடத்தில் Overman’s சான்று Gas Testing சான்று, First aid சான்று பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 

ரூ.19,035. 

வயது வரம்பு: 

26.11.2016 அன்று 18 முதல் 35க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

2. Mining Sirdar T & S Grade- C: 

68 இடங்கள் (பொது - 35, எஸ்சி - 10, எஸ்டி - 13, ஒபிசி - 10). 

தகுதி: 

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining Sirdar சான்று, Gas Testing சான்றிதழ், First Aid சான்று பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 

ரூ.19,035. 

வயது வரம்பு: 

26.11.2016 அன்று 18 முதல் 35க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்விற்கு Mental Ability, Quantitative Ability, Logical & Reasoning Skills ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: 

பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.500. இதை Northern Coalfields Ltd., Singrauli என்ற பெயரில் SBI, Morwa (Branch Code: 03767)ல் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

மாதிரி விண்ணப்பத்தை www.nclcil.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதன் வடிவமைப்பை கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager (P/MP &R), 
Personnel Department, NCL Headquarters, 
Singrauli P.O. 
Madhya Pradesh. 
PIN: 486889.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 26.11.2016.

No comments:

Post a Comment