TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

தமிழ்நாடு மீன்வளத் துறையில் தொழில்நுட்ப உதவியாளர் பணி

தமிழ்நாடு மீன்வளத் துறையில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 13 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 13

பணி: Technical Assistant

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சுய சான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment