கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில், ராணுவ பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம், 6ம் தேதி முதல், 11ம் தேதி வரை, மதுரை எஸ்.டி.ஏ.பி., விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.மதுரையில் நடக்கும் இந்த முகாமில், சோல்ஜர் டெக்னிக்கல் மற்றும்சோல்ஜர் டெக்னஜிக்கல் எவியேஷன், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டென்ட், சோல்ஜர் ஜெனரல், சோல்ஜர் டிரேட்ஸ்மேன், சோல்ஜர் கிளார்க், ஸ்டோர்கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு நடக்கிறது.சோல்ஜர் டெக்னிக்கல் உடன் சோல்ஜர் டெக்னிக்கல் எவியேஷன் மற்றும்சோல்ஜர் நர்சிங் அசிஸ்டென்ட்:மதுரை, நீலகிரி, தேனி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு, 6ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பும், 7ம் தேதி உடல் தகுதி தேர்வும் நடக்கிறது.சோல்ஜர் ஜெனரல்:மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, நாமக்கல் மற்றும்திருப்பூரை சேர்ந்தவர்களுக்கு, 7ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பும், 8ம் தேதி உடற்தகுதி தேர்வும் நடக்கிறது; நீலகிரி, தேனி, ஈரோடு, கோவை, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு, 8ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பும், 9ம் தேதி உடற்தகுதி தேர்வும் நடக்கிறது.சோல்ஜர் டிரேட்ஸ்மேன்:மதுரை, நீலகிரி, தேனி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு, 9ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பும், 10ம் தேதி உடற்தகுதி தேர்வும் நடக்கிறது.சோல்ஜர் கிளார்க் (எஸ்.டி.,) மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல்:மதுரை, நீலகிரி, தேனி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு, 10ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பும், 11ம் தேதி உடற்தகுதி தேர்வும் நடக்கிறது.
Home
Unlabelled
மதுரையில் ராணுவ பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம்.
மதுரையில் ராணுவ பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment