TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

108 ஆம்புலன்ஸ் சேவையில் பணிகளுக்கு 6-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்.

108 ஆம்புலன்ஸ் சேவையில், மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம், வரும் 6-ஆம் தேதி நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறுகிறது.உதகை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் இந்த தேர்வில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம். ஓட்டுநர் பணியிடத்திற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற அல்லது தவறிய, 25 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் இலகு ரக ஓட்டுநர் உரிமம் எடுத்து 5 வருடங்கள் நிறைவு பெற்றுள்ள ஆண்கள் மட்டுமே விண்ணபிக்கலாம்.மருத்துவ பணியாளர் பணிக்கு 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இருபாலரும்  விண்ணபிக்கலாம். இந்த பணிக்கு,  B.Sc Nursing, G.N.M, ANM, D.PHARM, DMLT ஆகிய ஏதேனும் ஒரு கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.இஎம்டி பயிற்சியாளர் பணிக்கு, இஎம்டிஇ டெக்னீஷியன், ஆர்த்தோ டெக்னீஷியன், உள்ளிட்ட படிப்புகளை முடித்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வேலை வாய்ப்பு முகாமுக்கு தங்கள் கல்வி மற்றும் அனுபவம் தொடர்பான சான்றிதழ்களை எடுத்து வர வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment