TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

கால்நடை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகள்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப்பணிகளில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சென்னை, மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக் கழகத்தில், 48 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், 2 உதவி நூலகர் பணியிடங்கள் மற்றும் பின்னடைவு அடிப்படையில் 16 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் உள்ளன. இந்த 66 பணியிடங்களுக்கு உரியகல்வித் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவிப் பேராசிரியர்பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணிப் பிரிவுக்கான பாடங்களில் குறைந்த பட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் பேராசிரியர் பணியில் சேர்வதற்கான தேசிய தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி முடித்தவர்கள் நெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் விண்ணப்பிக்கலாம். உதவி நூலகர் பணிக்கு லைப்ரரி சயின்சில் முதுநிலைப் படிப்பு, இன்பர்மேஷன் சயின்ஸ், டாக்குமென்டேஷன் சயின்ஸ் அல்லது அதற்கு நிகரான கல்வியை முடித்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு www.tanuvas.ac.inஎன்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் உதவிப்பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப்பணிகளில் சேர விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.உரிய தகுதி உடையவர்கள், விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 250 ரூபாய் செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை The Financial Officer, Tamilnadu Veterinary and Animal Sciences University, Chennai - 600 051 என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து விண்ணப்பிக்கவும்.விண்ணப்பங்கள் www.tanuvas.ac.inஎன்ற இணைய தளத்தில் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரியசான்றுகளின் நகல்கள் மற்றும் 25 ரூபாய்க்கு அஞ்சல் தலை ஒட்டியசுயமுகவரி எழுதிய அஞ்சல் உறையுடன் அனுப்ப வேண்டும்.விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 15-ஆம் தேதி கடைசி நாள். விண்ணப்பங்களை பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், மாதவரம் பால் பண்ணை, சென்னை - 600 051 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

No comments:

Post a Comment