TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

விமானப் படையில் சேர விரும்புவோருக்கு...

பறக்கும் ஆசை பலருக்கும் இருக்கும். எனவே, விமானப் படையில் சேர்வதற்கான தேர்வுகள் குறித்தும், அதற்கு தயாராகும் முறைகள்,தகுதிகள் குறித்தும் அறிய வேண்டும்.பிரிவுகளும் அவற்றுக்கான கல்வித் தகுதிகளும்பறத்தல் பிரிவுஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில், குறைந்தபட்சம் 60% கூட்டு மதிப்பெண்களுடன், பட்டப் படிப்பை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளிப் படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும் அல்லது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இருந்து, குறைந்தபட்சம் 60% கூட்டு மதிப்பெண்களுடன் பி.இ/பி.டெக் படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.தொழில்நுட்பப் பிரிவுஏரோநாடிகல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ/பி.டெக் முடித்தவர்கள் அல்லது இந்திய பொறியாளர் கல்வி நிறுவனத்தின், அசோசியேட் மெம்பர்ஷிப்பின் ஏ மற்றும் பி பிரிவு தேர்வுகளை எழுதியவர்கள் அல்லது ஏரோநாடிகல் சொசைட்டி ஆப் இந்தியா அல்லதுஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் பொறியாளர் கல்வி நிறுவனத்தின் கிராஜுவேட் மெம்பர்ஷிப் தேர்வு ஆகியவற்றை எழுதியவர்கள்.நிர்வாகம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ்ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் அல்லது ஏதேனும் ஒரு படிப்பில் முதுநிலைப் பட்டம் அல்லது சமமான டிப்ளமோ ஆகியவற்றைப் படித்து, குறைந்தபட்சம் 50% கூட்டு மதிப்பெண் பெற்றவர்கள்.அக்கவுன்ட்ஸ்குறைந்தபட்சம் 60% கூட்டு மதிப்பெண்களுடன் பி.காம் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது எம்.காம்/சி.ஏ/ஐ.சி.டபிள்யூ.ஏ போன்றவற்றில், குறைந்தபட்சம் 50% கூட்டுமதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்புபறத்தல் பிரிவு - குறைந்தபட்சம் 19 வயதும், அதிகபட்சம் 23 வயதும் இருக்க வேண்டும்.தொழில்நுட்ப பிரிவு - குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 28 வயதும் இருக்க வேண்டும்.Ground Duty பிரிவு - குறைந்தபட்சம் 20 வயது, பட்டதாரிகள் (அதிகபட்சம் 23 வயது), முதுநிலைப் பட்டதாரிகள்/எல்.எல்.பி(5 வருட இன்டக்ரேட்டட் படிப்பு) (அதிகபட்சம் 25 வயது), எல்.எல்.பி (பட்டப்படிப்பிற்கு பிறகான 3 வருட படிப்பு) (அதிகபட்சம் 26 வயது), எம்.எட். பிஎச்.டி, சி.ஏ, ஐ.சி.டபிள்யூ.ஏ (அதிகபட்சம் 27 வயது).கமிஷன் வகைகள்நிரந்தர கமிஷன் - Superannuation வயது வரை, candidates பணிபுரிவார்கள்.குறுகிய சேவை கமிஷன் - SSC Flying பிரிவுக்கான கமிஷனிங் தேதியிலிருந்து 14 வருடங்கள் மற்றும் டெக்னிக்கல்மற்றும் Ground duty பிரிவுகளுக்கு 10 வருடங்கள்(பணியிடங்கள் கிடைப்பதை பொறுத்து, 4 வருடங்கள் நீட்டிப்பு உண்டு)AFCAT Men தேர்வுக்கான தேர்ந்தெடுப்பு முறைகுறிப்பிட்ட தேர்வு மையங்களில் இத்தேர்வு நடத்தப்படும். மொத்தம் 2 மணிநேரங்கள் நடக்கும் இத்தேர்வில், Verbal ability, Numerical ability, Reasoning, General awareness and Aptitude போன்ற பிரிவுகளில், ஆப்ஜெக்டிவ் முறையிலான கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வில் தேர்ச்சிபெறும் நபர்கள், டெஹ்ராடூன், மைசூர், காந்திநகர்(குஜராத்) அல்லது வாரணாசி போன்ற இடங்களிலுள்ள ஏர்போர்ஸ் தேர்வு வாரியங்களில், அடுத்தகட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.இரண்டாம் நிலை தேர்வானது, கீழ்கண்ட தேர்வு முறைகளைக் கொண்டிருக்கும்,நிலை I - இன்டலிஜென்ஸ் தேர்வுநிலை II - சைகலாஜிகல் டெஸ்ட், குரூப் டெஸ்ட் மற்றும் நேர்முகத்தேர்வுஇரண்டாம் நிலைக்குப் பிறகு தேர்ச்சிபெறும் நபர்கள், அவர்களின் தகுதி மற்றும் தேர்ந்தெடுத்த பிரிவுகளின் அடிப்படையில், Branch specific test -ஐ எழுத வேண்டும்.Pilot Aptitude Battery Test(PABT) for flying branchEngineering knowledge Test(EKT) for technical branchமருத்துவ சோதனைதங்களின் முதல் முயற்சியில் Pilot Aptitude Battery Test -ல் தோல்வியடைவோர் அல்லது ஏர்போர்ஸ் அகடமியில் பறத்தல் பயிற்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர், இதற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.AFCAT Men தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?http://careerairforce.nic.in/auth/candidate/default.asp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது AFCAT cell -க்கு, Post bag no-5, RK Puram (main) P.O., New Delhi - 110066 என்ற முகவரியில் உங்களின் விண்ணப்பங்களை அனுப்பலாம். சாதாரண தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

Reference புத்தகங்கள்

பொது ஆங்கிலம் - ஹரி பிரசாத்பொது அறிவு - லட்சுமி காந்த்ராணுவ திறனாய்வு மற்றும் பகுப்பாய்வு - பி.கே.மிட்டல் மற்றும் ஆர்.எஸ்.அகர்வால்ஆரம்பநிலை கணிதம் - ஆர்.எஸ்.அகர்வால்மேற்கூறிய எழுத்தாளர்களைத் தவிர, வேறுசில சிறந்த புத்தகங்களும் உள்ளன.

தேர்வுக்கான பாடத்திட்டம்

பொது விழிப்புணர்வு - 25 மதிப்பெண்பொது ஆங்கிலம் - 25 மதிப்பெண்எண்கணித திறன் - 25 மதிப்பெண்ராணுவ திறனாய்வு மற்றும் பகுப்பாய்வு - 25 மதிப்பெண்

No comments:

Post a Comment