TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பதிவாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தன்பாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பதிவாளர் மற்றும் உதவி பதிவாளர் பணிக்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துணை பதிவாளர்: அங்கீகாரம் பெற்ற முதுகலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 9 வருட உதவி பேராசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உதவி பதிவாளர்: 
அங்கீகாரம் பெற்ற முதுகலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 8 வருட மேற்பார்வையாளர் பணிஅனுபவம் அல்லது அதற்கு இணையான பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை கல்வி நிறுவன இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.100 வரைவோலை எடுத்து அத்துடன் ரூ.50-க்கான தபால் முத்திரை ஒட்டி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் செப்டம்பர் 28ம் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களை அறிய http://ismdhanbad.ac.in/noticeboard/recruitment.php என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment